வாட்டி வதைக்கும் வெயில்.! குளிர்வித்த திடீர் மழை.! எந்தெந்த பகுதிகளில்.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

Published : Mar 10, 2026, 03:01 PM IST

Tamilnadu Rain: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

PREV
14
வெயிலால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

24
மழை எச்சரிக்கை

இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இதனிடையே மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

34
நாகையில் மழை

அதன்படி இன்று அதிகாலை முதலே நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் நாகப்பட்டினத்தில் நாகூர், புத்தூர், திருமருகல், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மிதமான மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

44
மயிலாடுதுறை பகுதிகளில் மழை

அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று காலை முதல் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் கடலோரப் பகுதியான தரங்கம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருக்கடையூர், அனந்தமங்கலம், பொறையார், தில்லையாடி உள்ளிட்ட கிராமங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் மழையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து கொண்டு ரசித்தபடி சென்றனர். 

Read more Photos on
click me!

Recommended Stories