தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்து வருகிறது. இதனால் வேலூர், கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகல் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். வெயில் அதிகமாக இருப்பதால் நீர்சத்து குறையாத வாறு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.
26
இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை
அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில், மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை ஓடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், தெலங்கானா, ராயலசீமா, தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடக்கு உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
36
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
அதேபோல் ஏப்ரல் 09 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 10 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 11 மற்றும் 12 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 13 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
56
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
66
சென்னைக்கு மழை எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.