Tamilnadu heatwave
வெப்ப அலை வீசும்
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Thunder and lightning rain
இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கடலோர ஆந்திரபிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Tamilnadu rain
மிதமான மழைக்கு வாய்ப்பு
அதேபோல் ஏப்ரல் 15 முதல் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
heatwave in tamilnadu
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு
இன்று முதல் 17ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று முதல் 15ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
Chennai weather
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:
ஏப்ரல் 14 மற்றும் 15 தேதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை கிளைமேட் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.