ஏப்ரல் மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்? பகீர் எச்சரிக்கை.! அலறும் பொதுமக்கள்!

Published : Apr 01, 2026, 04:08 PM IST

Tamilnadu Rain: தமிழகத்தில் வளிமண்டல தாழ்வு பாதை காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில நாட்கள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

PREV
17
வெப்ப அலை எச்சரிக்கை

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. வேலூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி தாண்டி சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும் என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் இயல்பைவிடவும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது வெப்பநிலையில் இருந்து ஓரளவுக்கு நிவாரணம் வழங்கினாலும், வடக்கு மற்றும் கடலோர தமிழகத்தில் சில பகுதிகளிலும், உள் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இயல்பைவிட அதிக வெப்பநிலையுடன் கூடிய வெப்பஅலை (Heat Wave) அதிக நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளது.

27
வானிலை மையம் முக்கிய அப்டேட்

இதனால் வெப்ப அழுத்தம் ஏற்படும், மாநிலம் முழுவதும் அதிகபட்சமாக பகல் மற்றும் இரவு நேரத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவும், அசாதாரணமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஏப்ரல் மாதம் வழக்கத்தை விட அதிக வெப்பம் தகிக்கும் மாதமாக இருக்கும். வெப்பத்தால் ஏற்படும் அசவுகரியங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.

37
மழைக்கு வாய்ப்பு

அதாவது வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில், தமிழக உள் மாவட்டங்களிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களான தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

47
இடி மின்னலுடன் மழை

அதேபோல் ஏப்ரல் 03 தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 04 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

57
ஏப்ரல் 05 மழை எச்சரிக்கை

ஏப்ரல் 05 மற்றும் 06 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 07 தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடக்கு உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

67
சுட்டெரிக்கப்போகும் வெயில்

ஏப்ரல் 03 முதல் 05 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.

77
சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories