தவெக தனித்து நிற்பது என முடிவானதும் போட்டி போட முதலில் ஆர்வம் காட்டிய நிர்வாகிகள் இப்போது பின்வாங்குவதாகக் கூறப்படுகிறது. விருப்பமனுவையே ஆன்லைனில் வாங்கும் முடிவில் விஜய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்களா என தவெகவை நோக்கி கேள்விகள் எழ அதை உறுதி செய்ய அந்த கட்சி ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதாவது கட்சியோட மாவட்ட செயலாளர்கள் மூலமாக தேர்தலுக்கு பணம் செலவழிக்கிறவர்கள் யார்? திமுக- அதிமுகவில் சீட்டு கிடைக்காமல் இருக்கிறவர்கள் யார் என ஒரு லிஸ்ட் தயார் செய்ய சொல்லி இருக்கிறது தவெக தலைமை அலுவலகம். இதன்படி தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 234 வேட்பாளர்கள் கண்டறியப்பட்டு பட்டியல் தயாராயிருக்கிறது.