அரசு ஊழியர்களுக்கு குஷியான செய்தி! மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வெளியான அசத்தல் அறிவிப்பு!

Published : Jun 26, 2025, 09:48 AM IST

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவச் செலவுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

PREV
17
மருத்துவ காப்பீட்டு திட்டம் நீட்டிப்பு

தமிழக அரசு, அதன் ஊழியர்களுக்காக செயல்படுத்தி வரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் (New Health Insurance Scheme - NHIS) 2026 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை மேலும் ஓர் ஆண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த உத்தரவு, தமிழக அரசின் நலத்திட்ட நடவடிக்கைகளில் ஓர் முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

27
திட்டத்தின் சிறப்பு

இந்த திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட, குறைந்த செலவில் சிறந்த மருத்துவ சேவைகளை பெற முடிகிறது. மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் உயர்ந்துவரும் சூழலில், இத்தகைய காப்பீட்டு திட்டம், அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒரு பாதுகாப்பு கவசமாக அமைகிறது.

37
திட்டத்தின் நோக்கம்

சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டம் அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் மிகுந்த பாதுகாப்பை அளிக்கும். அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சிகிச்சைக்காக ஏற்படும் அதிக செலவுகளைத் தடுக்கலாம். உயர் தர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

47
திட்டத்தின் பயனாளர்கள்

தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து நிலை அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த திட்டத்தின் மூலம் பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் சுமார் 10 இலட்சம் பேர் நேரடியாக சுகாதார பாதுகாப்பைப் பெறுகின்றனர்.

57
திட்டத்தின் செயல்முறை

இந்த திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணம் செலுத்த வேண்டியதில்லை.மருத்துவ செலவுகள் நேரடி வரைவோலை (Cashless treatment) முறையில் கையாளப்படுகின்றன. ஒருவருக்கு ஆண்டு தோறும் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை செலவுகள் காப்பீட்டுத் திட்டத்தில் கிடைக்கும்.

67
நீட்டிப்பு குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டவை

தமிழ்நாடு நிதித் துறை வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில், இந்த திட்டம் 1.7.2025 முதல் 30.6.2026 வரை தொடரும்.இந்த நீட்டிப்பு மூலம், அரசு ஊழியர்கள் தொடர்ந்து மருத்துவ வசதிகளைப் பெற முடியும்.திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள வசதிகள் அனைத்தும் அப்படியே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

77
எதிர்பார்க்கப்படும் பலன்கள்

அரசு ஊழியர்களின் நிம்மதியான பணிச் சூழல் உருவாகும்.குடும்ப உறுப்பினர்களின் மருத்துவப் பாதிப்புகள் காரணமாக பணியில் ஏற்படும் மன அழுத்தம் குறையும். அரசு மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசுத் துறைகளுக்கு இடையே இணைப்பை அதிகரிக்க இந்த திட்டம் வழிவகுக்கும்.

அரசு ஊழியர்கள் நிம்மதி

தொடர்ந்து மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓராண்டு நீட்டிப்பதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு ஒரு நம்பிக்கையும், நிம்மதியும் அளித்திருக்கிறது. உயரும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்வதில் இத்தகைய திட்டங்கள் மிகவும் அவசியமானவை. இதை மேலும் விரிவாக்கி, அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Read more Photos on
click me!

Recommended Stories