பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் தான்.! அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை

First Published | Jan 5, 2025, 7:46 AM IST

கல்விக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் படி ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

school Exam

கல்விக்கு முக்கியத்துவம்

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கல்வியானது கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் ஆர்வமோடு படிப்பதோடு எளிதில் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் இலவச கல்வியையும் அரசு வழங்கி வருகிறது. மேலும் காலை மற்றும் மதிய உணவு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

school Practical Exam

இலவச கல்வி-  மாணவர்கள் ஆர்வம்

இதனால் ஏழை, எளிய மாணவர்கள் அதிகளவு கல்வி நிலையங்களுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இடை நிற்றலும் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணாமக தனியார் பள்ளிகளில் படிப்பதை விட அரசு பள்ளிகளில் படிக்கவே மாணவர்கள் விரும்பும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் தங்களது தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வர வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

Tap to resize

பள்ளிகளில் ஆண்டு விழா

மேலும் கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாடு சுற்றுலாவும் அழைத்து செல்லப்படுகிறது. மேலும் மாநில அளவில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களையும் குழுவாக கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆண்டு விழாவை அரசு பள்ளிகளிலும் நடத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் இந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,  2024-2025 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  உத்தரவின்படி  அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், மாணவர்களின் சிறப்பு அம்சங்கள், ஆசிரியரின் சிறப்பு செயல்பாடுகள், ஆகியவற்றை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து பள்ளி ஆண்டுவிழா நடத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு பள்ளியில் ஆண்டுவிழா நடத்திய 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அனுப்பப்பட்டுள்ளது.

school student

ஆண்டு விழா நடத்தி வேண்டும்

எனவே ஜனவரி மாதம், பிப்ரவரி மாதங்களில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளிகளின் வசதிக்கேற்ற பெற்றோர்கள்,பொது மக்களின்  முன்னிலையில்  அமைச்சர்கள் மற்றும்  சட்டமன்ற ,நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் கொண்டு சிறப்பாக பள்ளி ஆண்டு விழா நடத்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதன் மூலம் பள்ளி மாணவர்களின் திறமைக்கு அனைவரின் முன்பாகவும் வெளிக்கொண்டு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Latest Videos

click me!