ஒரு லட்சத்துக்கு கீழே வரப்போகும் தங்கம்.. இன்று ரூ.5,360 குறைவால் குஷியில் நகைப்பிரியர்கள்!

Published : Mar 23, 2026, 10:43 AM IST

ஜனவரியில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கம் விலை, போர் பதற்றத்திற்கு மத்தியிலும் மார்ச் மாதம் முதல் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று (மார்ச் 23) சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ரூ.1,03,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV
15
ஜனவரி தங்கம் விலை உச்சம்

கடந்த ஜனவரி மாதம் தங்கம் விலை தொடர்ந்து 2000 முதல் 5000 வரை தினமும் உயர்ந்து வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியது. அதாவது ஒரு சவரன் ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியதால் நகைப்பிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு நகை வாங்க பட்ஜெட் ஒதுக்கி திட்டமிட்டவர்கள் புலம்பி வந்தனர். இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம் 28-ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இதற்கு ஈரான் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

25
போர் பதற்றம் இடையே குறையும் தங்கம்

இந்த போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை மேலும் உயரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சரசரவென குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.5,360 வரை குறைந்ததால் குஷியில் நகை பிரியர்களை துள்ளிக்குதித்தனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.5,360 குறைந்துள்ளது.

35
தடுமாறும் தங்கம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.13,620க்கும், ஒரு சவரன் ரூ.1,08,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

45
அதிரடியாக குறைந்த தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (மார்ச் 23) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ரூ.1,03,600ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.670 குறைந்து ரூ.12,950ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 14,127ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 113,016ஆக விற்பனையாகிறது.

55
இன்றைய வெள்ளி விலை

இன்று வெள்ளி விலை ரூ.15 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.235,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொழில்துறை பயன்பாடு மற்றும் முதலீட்டு தேவை குறைந்ததே இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories