TN Government Scholarships: இலவச விடுதி.. மாதம் ரூ.2000 உதவித்தொகை.. யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

Published : May 12, 2026, 07:52 PM IST

Tamil Nadu Government: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழங்கும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தேர்வு செய்யப்படும் 15 மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை.

PREV
15
மாணவர்களுக்கான கல்வி உதவி

தமிழக அரசு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு அதிரடி திட்டங்கள் மற்றும் உதவி தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது தமிழ் வழியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை, மேலும் கல்வி உதவித்தொகை திட்டங்களாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு, ஆண்டு வருமானம் 2,00,000 ரூபாயையை தாண்டாத குடும்பங்களுக்கு உதவித்தொகை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சி, மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்துதல் போன்ற திட்டங்களும் நடைமுறையில் உள்ளது.

25
கல்வி உதவித் தொகை

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன் நடத்தப்படும் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (M.A. Tamil) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (Five Years Integrated Post Graduate M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது.

35
விண்ணப்பிப்பது எப்படி?

அந்த வகையில் தற்போது 2026-27ஆம் கல்வியாண்டில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளன. மேற்கண்ட படிப்புகளில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/ தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம்

45
மாதம் ரூ.2000 கல்வி உதவி திட்டம்

இவ்வகுப்புகளில் சேர்க்கைப்பெறும் மாணவர்களுள் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு திங்கள்தோறும் தமிழ்நாடு அரசால் ரூ.2000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இருபாலருக்கான தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி மற்றும் உணவு வசதி உள்ளது.

55
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து நேரில் (அ) அஞ்சலில் இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் 15.06.202 - திங்கள் கிழமைக்குள்ளும் முதுகலை தமிழ்ப் பட்டப் படிப்பிற்கு 30.06.2026 செவ்வாய் கிழமைக்குள்ளும் சமர்ப்பித்திட வேண்டும். மேலும் தகவல் பெற மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நிறுவன வலைத்தளத்தில் பார்த்துதெரிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories