இந்த இரண்டு திட்டங்களும் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக சுயதொழில் மற்றும் கால்நடை வளர்ப்பின் மூலம் குடும்ப வருமானத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
திட்டங்களுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட விரிவான வழிகாட்டுதல்களை கால்நடை பராமரிப்புத் துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.167 கோடி நிதி ஒதுக்கீடு
- கறவை மாடுகள் வழங்கும் திட்டம் – ரூ.57 கோடி
- வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் – ரூ.110 கோடி
- மொத்த ஒதுக்கீடு – ரூ.167 கோடி
இந்த அறிவிப்புகள், பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் கிராமப்புற கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க : Bank : வங்கியில் பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி? தெரிய வேண்டிய விதிமுறைகள்!