அடிதூள்! இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம் கொடுக்கும் தமிழக அரசு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்!

Published : Nov 14, 2025, 09:10 AM IST

தமிழக அரசு உணவு டெலிவரி தொழிலாளர்களுக்காக காப்பீடு திட்டம் மற்றும் ஓய்வு அறைகளைத் தொடர்ந்து, தற்போது 2000 பேருக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

PREV
15
தமிழக அரசு

தமிழக அரசு பொது மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு அசத்தலான சூப்பரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது சொந்த தொழில் செய்து முன்னேறும் வகையில் கடன் உதவி , மானிய உதவி திட்டங்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விவசாயிகள் மின் மோட்டார் வாங்கினால் 50 % அளவிற்கு தள்ளுபடி போன்ற திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

25
உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஓய்வு அறை

இந்நிலையில் உணவு டெலிவரி செய்யும் தொழிலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை சட்டமன்றத்தில் அறிவித்தது. அந்த வகையில் மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாலம் பொருட்களை டெலிவரி செய்து வரும் தொழிலாளர்களுக்காக சாலையோரங்களில் குளிர்சாதன வசதிகளோடு ஓய்வு அறை அமைக்கப்பட்டது.

35
காப்பீடு திட்டம்

அடுத்ததாக காப்பீடு திட்டமும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் பணியின் போது மரணம் அடைந்தால் 5 லட்சம் ரூபாய் இழப்பீடும், ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண்ணில் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டால் 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது

45
ரூ.20,000 மானியம் வழங்கும் தமிழக அரசு

இந்நிலையில் அடுத்தாக 2000 ஊழியர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, ஒரு தொழிலாளர்களுக்கு 20,000 மானியம் என்ற அடிப்படையில் மொத்தம் 4 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

55
குஷியில் உணவு டெலிவரி ஊழியர்கள்

இதன்படி, நல வாரியத்தின் அனுமதி பெற்று விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் பைக் இல்லாமல் சைக்களில் சென்று உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பயனடையவுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories