Exit Poll 2026 : யார் முன்னிலை? இன்று மாலை 6.30க்கு பதில் சொல்லும் எக்சிட் போல்ஸ்!

Published : Apr 29, 2026, 11:29 AM IST

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் தடை இன்றுடன் முடிவடைகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாக உள்ளன.

PREV
15
தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக அமைதியாக நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. ஒரே நாளில் முழு மாநிலமும் வாக்களித்த இந்தத் தேர்தல், அரசியல் கட்சிகளின் வலுவான பிரச்சாரத்துடன் அதிக கவனத்தை ஈர்த்தது.

25
இன்று எக்சிட் போல்ஸ் வெளியீடு

இதேநேரத்தில், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதில் 152 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்தது. 142 தொகுதிகளுக்கான இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29) நடைபெறுகிறது. இதன் மூலம் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் செயல்முறை முழுமையாக நிறைவடைகிறது.

35
தேர்தல் ரிசல்ட் கணிப்பு

முதற்கட்ட வாக்குப்பதிவில் 91 சதவீதத்தை தாண்டிய வாக்காளர் பங்கேற்பு பதிவாகியுள்ளது. அதனால் இரண்டாம் கட்டத்திலும் அதிக வாக்குப்பதிவு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் உள்ள கணிப்புகள் குறித்து ஆர்வம் அதிகரித்து வருகிறது.

45
எக்சிட் போல்ஸ் அப்டேட்

இந்த சூழலில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக முடிந்த பிறகே இந்த கணிப்புகள் வெளியிடப்பட வேண்டும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இன்று மாலை 6.30 மணிக்கு பிறகு எக்சிட் போல் வெளியாகும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

55
5 மாநில தேர்தல் கணிப்பு

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் கருத்துக்கணிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக அவை தாமதமானது. ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.30 மணி வரை எக்சிட் பதிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்தக் கட்டுப்பாடு நீங்கியுள்ளதால், இன்று மாலை வெளியாகும் கணிப்புகள் அரசியல் நிலவரத்தை எப்படிப் பிரதிபலிக்கும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories