ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! திமுக போட்டி! வேட்பாளர் யார்?

First Published | Jan 10, 2025, 11:25 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட உள்ளது. காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறது. பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறும்.

EVKS Elangovan

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாத காலத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். 

Erode East By Election

அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாளாகும். ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சி ஒதுக்கப்படுமா? அல்லது ஆளுங்கட்சியான திமுக போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட உள்ளது. 

Tap to resize

selvaperunthagai

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் மறைவு அடைந்ததையோட்டி இடைத்தேர்தல் வரவிருக்கிறது.

MK Stalin

2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.

Congress

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என தெரிவித்துள்ளார். 

DMK

ஈரோடு தொகுதியில் திமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் அமைச்சர் முத்துசாமி மற்றும் செந்தில் பாலாஜி மூலமாக எப்படியாவது சீட் பெற்று விட வேண்டும் திமுக நிர்வாகிகள் போட்டா போட்டி போடுகின்றனர்.  குறிப்பாக திமுக மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், தேமுதிகவில் இருந்து வந்த முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் பெயர் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!