நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்த கையோடு சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

First Published | Jan 10, 2025, 10:26 PM IST

நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Naam Tamilar Katchi

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு மாற்றாக வேகமாக வளர்ந்த கட்சியாக நாம் தமிழர் கட்சி பார்க்கப்பட்டது.  ஆளுங்கட்சியான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்த சூழலில் உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் கெத்தாக தனித்து தேர்தலை எதிர்கொண்டு  8 சதவிகிதம் முதல் 10 சதவிகித வாக்குகளை பெற்று சீமான் தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைத்தார். 

Seeman

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியில் தனித்து போட்டியிட்ட அவருக்கு விவசாய சின்னம் கிடைக்காததால் சுயேட்சை சின்னமான மைக் சின்னத்தில் போட்டியிட்டு குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சென்று  8.22 சதவீத வாக்குகளை பெற்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தார். மறுபுறம் சீமான் பேச்சால் அதிருப்தி அடைந்த அக்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி  வருகின்றனர். 

Tap to resize

Seeman News

அது மட்டும் அல்லாமல் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒருமையில் சீமான் பேசியதை அடுத்து அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இவ்வளவு சர்சைகளுக்கு மத்தியில் சீமானுக்கு டெல்லியில் இருந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்துள்ளது. 

Election Commission of India

அதாவது கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவ்வறிவிப்பை கடிதம் வாயிலாக இன்று  இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது என நாம் தமிழர் கட்சி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

Seeman Shocking News

ஆனால் நாம் தமிழர் கட்சி கேட்டிருந்த உழவு செய்யும் விவசாயி, புலி சின்னங்களை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய வெப்சைட்டில் உள்ள ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் மாநிலக் கட்சியாக அறிவித்த சந்தோஷம் அக்கட்சியினருக்கு கொஞ்சம் நேரம் கூட நிலைக்கவில்லை. 

Latest Videos

click me!