டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!

Published : Feb 01, 2025, 02:20 PM ISTUpdated : Feb 01, 2025, 02:23 PM IST

பிப்ரவரி 3 முதல் 5 வரை மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
15
டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!
டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி காலமானார். அவர் மறைவை அடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

25
Erode

இந்த இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தது. இதில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 46 பேர் போட்டியிடுகிறார்கள். 

இதையும் படிங்க: பொதுத்தேர்வு தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தியை வெளியிட்ட தேர்வுத்துறை!

35
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அறித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக உள்ளவர்கள், மாநிலத்தின் வேறு பகுதியில் பணி புரிந்தாலும் அவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

45
டாஸ்மாக் கடைகள்

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரையும் மற்றும் 8ம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து எப்எல்2, எப்எல்3,  மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் (டாஸ்மாக்) நடத்தும் அனைத்து மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள்  மூடப்பட்டிருக்கும்.

இதையும் படிங்க: காலையில் தவெகவில்! மாலையில் திருமாவோடு சந்திப்பு! அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த ஆதவ் அர்ஜுனா!

55
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இந்த நாட்களில்  மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா எச்சரித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories