ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி காலமானார். அவர் மறைவை அடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.