பாமக.வில் தந்தை, மகன் இடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் அன்புமணி தலைமையிலான பாமக.வுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதால் ராமதாஸ்ன் ஆதரவாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, ஓசூர் உட்பட வடதமிழகத்தில் இக்கட்சி மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இக்கட்சியில் தந்தை, மகன் இடையேயான அதிகார மோதல் தற்போது உச்ச நிலையை எட்டி உள்ளது. மோதல் உச்சநிலை என்று கூறுவதற்கு பதிலாக, கட்சி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றே சொல்லாம்.
24
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி
கடந்த சட்டமன்ற தேர்தலில் “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்ற வாசகத்தோடு அன்புமணி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதற்கு தமிழக மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் அக்கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. அன்புமணி கடந்த முறை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 8 மாத காலமே உள்ளது. ஆனால் தந்தை, மகன் இடையேயான அதிகார மோதலால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க ஒரு அணியும், திமுகவுடன் கூட்டணி வைக்க ஒரு அணியும் முயற்சி செய்து வருகிறது.
34
உரிமை மீட்பு பயணம்
அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், இந்த சுற்றுப்பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும், கட்சியின் நிறுவனரும் நான் தான், தலைவரும் நான் தான். கட்சியின் அலுவலகம் சென்னையில் இருந்து தைலாபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அன்புமணி தலைமையில் செயல்படும் சென்னை அலுவலகத்தின் முகவரி இடம் பெற்றுள்ளதால் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அதே நேரத்தில் தைலாபுரம் அலுவலகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாததால் ராமதாஸ் தலைமையிலான அணியினர் விரக்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.