2014-ல் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம்..! சல்லி சல்லியாய் உடைக்கும் மாணிக்கம் தாகூர்..!

Published : Feb 16, 2026, 01:13 PM IST

2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அப்போதிருந்து, ஆட்சிக்கு வருவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

PREV
14
காங்கிரஸ் தோல்விக்கு திமுக காரணம்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும்மரமாகி வருகின்றன. காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் தொடர ஆட்சியில் பங்கு, அதிக சீட்டுகளை கேட்டு அதிர்ச்சியளித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் 2014ம் ஆண்டு தனது கட்சிக்கு ஏற்பட்ட பழைய வலி வெளிப்படுத்தி உள்ளது. மதுரையில் நடந்த கட்சிக் கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மறைமுகமாக திமுகவை குறிவைத்தார். திமுகவின் பெயரைக் குறிப்பிடாமல், அதன் சில தலைவர்களின் ஊழல் காரணமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வியடைந்ததாகக் கூறினார்.

24
திமுக தனது தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்

மதுரையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், விருதுநகர் மக்களவைத் தொகுதி எம்.பி. ணிக்கம் தாகூர், ‘‘திமுக தனது தவறுகளுக்குப் பொறுப்பேற்று அதற்குப் பதிலளிக்க வேண்டும்’’ என்று கூறினார். அப்போது, ​​திமுகவின் பெயரைக் குறிப்பிடாமல், 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அவர்களின் ஊழல் காரணமாக பெரும் தோல்வியைச் சந்தித்ததாக தாகூர் கூறினார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, திமுக தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது மட்டுமல்லாமல், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல் தொடர்பாகவும் அண்ணா ஹசாரே இயக்கம் நடந்தது. இதன் விளைவாக, 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அப்போதிருந்து, ஆட்சிக்கு வருவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு கட்சிகளும் இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்து ஒரு உடன்பாட்டை எட்டவில்லை. இந்த விவாதத்தின் போது காங்கிரஸ் எம்.பி., திமுகவின் பெயர் குறிப்பிடாத தாக்குதலைத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

34
அதிக இடங்களைக் கோரும் காங்கிரஸ்

திமுகவின் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கோ.தளபதி சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் பலத்தை கேள்விக்குள்ளாக்கினார். அதற்கு காங்கிரஸ் எம்.பி. தாகூர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.ஆனால் திமுக உயர்மட்டக் குழு தளபதி மீது மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை வடக்கு தொகுதியை இந்த முறை காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்று தாகூர் கோருகிறார். கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, காங்கிரசுக்கு அதிகாரப் பங்கையும் அதிக இடங்களையும் கோரியுள்ளார்.

44
திமுக தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் போது, ​​பல திமுக தலைவர்கள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. குறிப்பாக அ.ராஜா- 2ஜி ஸ்பெக்ட்ரம், கனிமொழி -பணமோசடி மற்றும் பல அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டன. மறந்த முன்னாள முதல்வர் கருணாநிதி மீதும் அவரது ஆட்சிக் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. விசாரணைகளுக்குப் பிறகு நீதிமன்றத்தால் ஆ.ராஜா, கனிமொழி ஆகியோர் இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வீழ்த்துவதற்கு இந்தத் தலைவர்கள்தான் காரணம் என்று நம்பப்படுகிறது. அப்போது முதல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் படாடத பாடுபடுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories