தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக வாஷிங்மெஷின், பிரிட்ஜ், டிவி, மிக்ஸி வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பொருட்களை புதிதாக வாங்க அல்லது பழைய பொருட்களை கடைகளில் மாற்றிக்கொள்ள ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும்.