தை மாதத்தில் பத்திர பதிவு செய்யப்போறீங்களா.? பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

Published : Jan 29, 2025, 07:01 AM IST

தை மாதத்தில் நிலம், வீடு பத்திரப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ள மக்களுக்கு நல்ல செய்தி. தை அமாவாசை மற்றும் மங்களகரமான தினங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

PREV
14
தை மாதத்தில் பத்திர பதிவு செய்யப்போறீங்களா.? பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
வீடு, நிலம் - நடுத்தரவர்க்க மக்களின் கனவு

சொந்தமாக நிலம், வீடு வாங்குவது நடுத்தர வர்க்க மக்களின் கனவாக இருக்கும். அந்த வகையில் பல வருடங்களாக சேமித்து வைத்த பணத்தை கொண்டு பல லட்சம் ரூபாய்களை கொடுத்து வீடு மற்றும் நிலம் வாங்கும்போது நல்ல நாளில், நல்ல நேரத்தில் வாங்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த வகையில் தை பிறந்தால் வழி பிறக்கும் வகையில் என்பார்கள். எனவே எந்த நல்ல காரியம் தொங்கினாலும் தை மாதத்தில் தொடங்க வேண்டும் என்பது மக்கள் விருப்புவார்கள்.
 

24
தை மாதத்தில் முன் பதிவு

எனவே இந்த மாதத்தில் நிலம் வீடுகள் பத்திர பதிவு செய்ய திட்டமிட்ட மக்களுக்கு குட் நியூஸ் தரும் வகையில் தை மாதத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

34
கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு

தற்போது தை அமாவாசை நாளான 29.01.2025 மற்றும் தை மாதத்தின் மங்களகரமான தினமான 31.01.2025 ஆகிய நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதனை ஏற்று தை அமாவாசை நாளான 29.01.2025 மற்றும் தை மாதத்தின் மங்களகரமான தினமான 31.01.2025 ஆகிய நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும்,

 

44
தட்கல் வில்லைகள் ஒதுக்கீடு

இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories