புயல் இன்று கரையை கடக்காதாம்! சென்னையில் மழையும் விடாதாம்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Published : Nov 30, 2024, 12:58 PM ISTUpdated : Nov 30, 2024, 01:14 PM IST

ஃபெஞ்சல் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. புயல் நாளை கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

PREV
16
புயல் இன்று கரையை கடக்காதாம்! சென்னையில் மழையும் விடாதாம்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Cyclone Fengal

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் முதல் புயலாக  ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் சென்னைக்கு 110 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கிலோ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வரை  சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

26
Tamilnadu Heavy Rain

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகளவில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. 

36
Chennai Heavy Rains

 விடாமல் பெய்து வரும் கனமழையால் ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கி விமானங்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையம் நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஃபெஞ்சல் புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் நாளை தான் கரையை கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

46
Tamilnadu Weatherman

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கடலுக்கு மேலே புயல் நிலைக்கொண்டுள்ளதால் மழை மேகங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். மழை மேகங்கள் உருவாவதால் சென்னையில் மையப் பகுதிகளில் தீவிர மழை தொடரும். 

56
Tamilnadu Weatherman Pradeep John

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஏரிகளின் சேமிப்பை மேம்படுத்த நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்யும் என நம்புகிறோம். பூண்டி - 17%, செம்பரபாக்கம் - 62%, ரெட்ஹில்ஸ் - 72% நீர் இருப்பு உள்ளது. காலை 6.00 மணி முதல் வடக்கு மற்றும் தெற்கு சென்னை பகுதிகளில் 130 முதல் 150 மி.மீ வரை பதிவாகியுள்ளது. 

66
Cyclone Fengal News

மற்றொரு பதிவில் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் நாளை தான் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளார். 

click me!

Recommended Stories