Directorate Of School Education
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சம்பவம் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு என்.சி.சி முகாம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது இரவில் பள்ளி வளாகத்தில் தங்கிய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
school student
இதனையடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் தனியார் பள்ளிகளில் அனுமதி பெறாமல் என்சிசி உள்ளிட்ட முகாம்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பள்ளியில் மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
Directorate Of School Education
இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: தாளாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் (POCSO) மற்றும் பள்ளிகளில் கல்வி சார் நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
Compulsory Retirement
பள்ளி மாணவியர்களிடம் ஒழுக்கக் கேடான முறையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஓய்வு (Compulsory Retirement) பணி நீக்கம் (Removal), பணியறவு (Dismissal) மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Student Safeguarding Advisory Committee
பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு (Student Safeguarding Advisory Committee) ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் அனுப்பப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Private Schools
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு உறுதிமொழி எடுத்தல் ஒவ்வொரு பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு தொடர்பான தகவல்களை அனைத்து மாணவர்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்கி கூறுதல் வேண்டும். மாணவர் மனசுப் பெட்டி, 14417 மற்றும் 10980 ஆகிய தொடர்பு எண்கள் ஆகியவற்றை மாணவிகள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் என்எஸ்எஸ், என்சிசி, சாரணர் அமைப்புகள் பள்ளிகளில் செயல்படுத்துவதற்கு முறையான அனுமதி பெற்றிருத்தல் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நடத்துதல் சார்ந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
Posco
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (POCSO) சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையத்தால் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியிடப்பட்ட YOU TUBE video-aso பள்ளியில் காண்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்களால் பள்ளி முதல்வர்களுக்கு நடத்தப்படும் மாதாந்திரக் கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.