நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுங்கள்.! லியோ படத்திற்கு சிக்கல்.? போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

Published : Jun 26, 2023, 09:54 AM ISTUpdated : Jun 26, 2023, 10:02 AM IST

நடிகர் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் பாடல்கள் இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு தள்ளும் வகையிலும்,ரவுடிசத்தை ஊக்கு விக்கும் வகையில் இருப்பதால் நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்.

PREV
14
நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுங்கள்.! லியோ படத்திற்கு சிக்கல்.? போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

லியோ பட பாடல் வெளியீடு

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்தநிலையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் பிறந்தநாளையொட்டி லியோ படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல் காட்சியில் நான் ரெடி தான் வரவா, அண்ணன் நான் இறங்கி வரவா, தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா,

எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா, எல்லா ப்ளூ பிரிண்டும் தெரியும், மிஷன் சக்ஸஸ்ஃபுல்லா முடியும், கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு, அது தான் கணக்கு,

ஏ பத்தாது பாட்டில் நா குடிக்க அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க சியர்ஸ் கெடா வெட்டி கொண்டாங்கடா என் பசி நான் தணிக்க... பொகயல அறுவடைக்கு தயாரான  ஓப்பொனன்ட் அ களையெடுத்து தலவலிய போக்கிப்பது எங்க தலை எழுத்து 

24
Leo

புகைப்பிடிக்கும் விஜய் 

ஆடாத ஆட்டம் போட்டா கட்டி வச்சி கோணில கட்டி லாரி ல ஏத்தி அர்த்துபோட அனுப்புடுவோம் ஃபேக்டரிக்கு .. 

என பாடல் வரிகள் அமைந்துள்ளது. மேலும் இந்த பாடலில் சிகெரெட் பிடித்து கொண்டே நடனம் ஆடும் காட்சியானது இடம்பெற்றுள்ளது. 

இந்தநிலையில் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கின்ற லியோ திரைப்படத்தின் பாடல் தொடர்பாக புகார் அளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்தப் பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்க வகையிலும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடித்திருப்பதாக  ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்திற்கு புகார் மனு அளித்துள்ளார்.

34

விஜய் மீது போலீசில் புகார்

தமிழக முதலமைச்சர் சமீபத்தில் போதை பொருளை ஆதரிக்கும் வகையிலும் போதை பொருட்களை தடுப்பதில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை பாயும் என்று கூறியிருந்தார். ஆகவே நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனை ஆதரிக்கும் வகையில் பாடலை வெளியீடு செய்த நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார். 

44

நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு.?

கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல்துறை உயர் அதிகாரிகள் சென்னை முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள்.  இந்த நிலையில்  இந்த பாடல் தற்போது வைரலாகி போதைப்பொருள் பொருட்களை உபயோகிக்கும் வகையில் இளைஞர் மத்தியில் தூண்டுதலாக அமைந்திருப்பதாகவும்  புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பொறுக்கித்தனமான பாடலை பாடியிருக்காரு... அவரெல்லாம் ஒரு மனுஷனா - விஜய்யை வெளுத்துவாங்கிய ராஜேஸ்வரி பிரியா

click me!

Recommended Stories