கொளத்தூர் தொகுதியில் அரசு பெரியார் மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது, வண்ண மீன் அங்காடி, விளையாட்டு மைதானங்கள், போட்டித் தேர்வுகளுக்கான ‘முதல்வர் படிப்பகம்’ போன்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு முதலமைச்சர் விளக்கினார். மாநகராட்சி பள்ளிகள், மருத்துவமனைகள், நூலகங்கள் என பல வசதிகள் அதிகம் உள்ள தொகுதியாக கொளத்தூர் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
பெண்களுக்கு திமுக ஆட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறிய ஸ்டாலின், “பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பார். என்னுடைய வெற்றிக்குப் பின்னாலும் என் மனைவிதான் காரணம்” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
மேலும், மிசா சிறையில் இருந்தபோது பல இன்னல்களை சந்தித்ததாக நினைவுகூர்ந்த அவர், “அந்த நேரங்களில் எனக்கு துணையாக நின்றது என் மனைவிதான். அதனால் தான் நான் சொல்கிறேன். பொண்டாட்டி சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும்” என மணமகனுக்கு அறிவுரை வழங்கினார். அவரது இந்த பேச்சு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடையே சிரிப்பையும் கைதட்டலையும் ஏற்படுத்தியது.