உதயநிதி இளம் பெரியாரா? பெரியார் ஸ்பெல்லிங் தெரியுமா அவருக்கு? ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு

Published : Dec 18, 2025, 01:28 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட மக்கள் சந்திப்புக் கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்ற நிலையில், அதில் ஆதவ் அர்ஜுனா, திமுக-வையும் அவர்கள் கொண்டாடும் இளம் பெரியாரையும் சாடி பேசி இருக்கிறார்.

PREV
14
Aadhav Arjuna Speech

ஈரோட்டில் தவெக பரப்புரைக் கூட்டம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவர் அர்ஜுனா அனல்பறக்க பேசி இருந்தார். அவர் பேசியதாவது : அண்ணன் செங்கோட்டையன் தவெக-விற்கு வந்த பிறகு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிடுச்சு. சமூக சீர்திருத்தவாதி பெரியாரின் பாதத்தை தொட்டு, நமக்கான ஒரு மிகப்பெரிய பயணத்தை ஈரோட்டில் இருந்து தலைவர் தொடங்கி இருக்கிறார். நம்முடைய குறிக்கோள் என்ன? நமது லட்சியம் என்ன? வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதில்லை. ஈரோட்டில் உள்ள ஒவ்வொரு நெசவாளர்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒவ்வொரு நாளும் தற்போதைய ஆட்சியின் ஊழலினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

24
இளைஞர்களே இல்லாத இளைஞர் மாநாடு

இங்க இருக்கும் அமைச்சர்கள், டாஸ்மார்க்கை மட்டுமே நடத்திக் கொண்டிருக்ககூடிய ஒரு நிர்வாகத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்றவேண்டும் என்றால் யாரால் மாற்ற முடியும்? என ஆதவ் அர்ஜுனா மக்களை பார்த்து கேட்க, அவர்கள் விஜய்யால் தான் மாற்ற முடியும் என பதிலளித்தனர். பின்னர் எந்த கட்சியால் மாற்ற முடியும் என கேட்டதற்கு, தவெக-வால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என அனைவரும் கோஷமிட்டனர்.

சமீபத்தில் ஒரு இளைஞர் மாநாடுனு சொல்லி மாநாடு மாதிரி ஒன்னு நடத்துனாங்க. ஆனால் அந்த மாநாட்டில் இளைஞர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் அங்க ஒரு இளைஞர் இருக்கிறார். அப்பா, பையன் ரெண்டு இளைஞர்கள் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். மாநாட்டில் அந்த இளைஞர்கள் சொல்றாங்க, ஒருத்தரை பார்த்து இளம் பெரியாராம். யாருப்பா இளம் பெரியார்? பெரியாரோட வரலாறு தெரியுமா உங்களுக்கு. முதல்ல பெரியார்னு ஸ்பெல்லிங் படிக்க தெரியுமா உங்களுக்கு.

34
சமூக நீதி தெரியாதவர் இளம் பெரியாரா?

இதே ஈரோட்டின் மண்ணில் எத்தனை சொற்பொழிவுகள்? எத்தனை மாநாடு? எத்தனை உழைப்பை போட்டிருக்கிறார் பெரியார். அந்த 70 வருட உழைப்பை சிதைப்பது போல் உங்க மகனை இளம் பெரியார்னு சொல்றீங்களே இதுவா ஆட்சி. பெரியாரை இப்படி அவமானப்படுத்தும் போது திராவிட கழகம் என்ன செய்துகொண்டிருக்கிறது. உங்களுடையே இதே மகன், 5 வருஷத்துக்கு முன்னாடி சினிமாவில் சமூக நீதினா என்னவென்று கேள்வி கேட்டார். சமூக நீதி என்றால் என்னவென்றே தெரியாதவர் இளம் பெரியாராம்.

44
ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை

பெரியாரைப் போல் ஒரு தலைவர் உருவாகவில்லை. எதிர்காலத்திலும் உருவாக்கப்பட முடியாது. இங்க ஒரே பெரியார், ஒரே அம்பேத்கர், ஒரே காமராஜர் தான். இந்த தலைவர்களை நீங்கள் அசிங்கப்படுத்தினால் தமிழக வெற்றிக் கழகம், மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். எழுதி வச்சிக்கோங்க, 2026, 2031, 2036னு போய்கிட்டே இருப்போம் நாங்க. உங்களுடைய சூதுனால மிகப்பெரிய இழப்புக்கு அப்புறம், தலைவர் விஜய்யை மக்கள் கிட்ட இருந்து பிரிக்க பார்த்தீர்கள். ஆனால் இங்க இருக்குற கூட்டம், இங்கு இருக்கும் மக்கள் சக்தி, இந்த ஆட்சியாளர்களை துரத்தக் கூடிய சக்தியாக இருக்கும்” என கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories