சென்னை டூ தூத்துக்குடி இனி 8 மணி நேரம் தான்.! வந்தே பாரத் ரயில் ரெடி! பயணிகள் ஹேப்பி!

Published : Feb 18, 2026, 04:46 PM IST

Vande Bharat Train: சென்னை எழும்​பூர் - திருநெல்​வேலி, நாகர்​கோ​வில் உட்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. மற்ற விரைவு ரயில்​களை விட கட்டணம் அதிகம்.

PREV
15
வந்தே பாரத் ரயில்

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை சென்ட்​ரல் - மைசூரு, கோவை - விஜய​வா​டா, சென்னை எழும்​பூர் - திருநெல்​வேலி, நாகர்​கோ​வில் உட்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. மற்ற விரைவு ரயில்​களை விட கட்டணம் அதிகம். ஆனாலும் முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், பயோ டாய்லட் வசதி, தானியங்கி கதவுகள், அதிவேக​ம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருப்பதால் பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பை பெற்றது.

25
பொதுமக்கள் கோரிக்கை

இதனையடுத்து பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பயணிகளின் நெரிசல் அதிகம் உள்ள பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை படிப்படியாக இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டு வருகிறது. மற்றொரு புறம் புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

35
சென்னை- தூத்துக்குடி

அதேபோல் சென்னை- மதுரை நெல்லை வழித்தடங்களில் கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு ஒரு வந்தே பாரத் ரயிலையும், தஞ்சையில் இருந்து மைசூர் வழியாக ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்கவும் ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

45
விரைவில் வந்தே பாரத் ரயில்

ஏற்கனவே கடந்த மாதம் சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது அந்த வழித்தடத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் தொடங்கியதும் அடுத்து சென்னை - தூத்துக்குடி, தஞ்சாவூர் - மைசூர் இடையே ரயில்கள் இயக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
பயண நேரம் குறைவு

இப்போது சென்னை டூ தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் 10 மணி நேரம் 40 நிமிடத்தில் செல்கிறது. வந்தே பாரத் வந்தால் 8 மணி நேரத்தில் செல்லும். இதன்மூலம் பயண நேரம் 2 மணி 40 நிமிடம் மிச்சமாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories