ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடி... ஸ்டாலின் பிரித்த ஏ-பி-சி கேட்டகிரி... அலறி ஓடும் அமைச்சர்கள்..!

Published : Feb 18, 2026, 04:31 PM IST

அமைச்சர்களுக்கு ஏகத்துக்கும் வலுவான அசைன்மென்ட்கள் கொடுக்கப்பட, அமைச்சர்களோ அலறி அடித்து ஓடுவதாக வரும் தகவல்தான் அறிவாலயத்தில் உச்சம் எடுத்திருக்கும் பட்டுவாடா பஞ்சாயத்து.

PREV
17
திமுகவின் வைட்டமின் அரசியல்

தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க, ஒரு பக்கம் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகளிலும், இன்னொரு பக்கம் தேர்தல் முன்னேற்பாடு வேலைகளையும் முடுக்கிவிட்டு இருக்கிறது திமுக. இதையெல்லாம் தாண்டி மிரட்டும் நான்கு முனை போட்டியை சமாளிக்க வைட்டமின் ‘பா’வை தண்ணீராய் பாய்ச்சவும் அக்காட்சி தலைமை முடிவு செய்திருக்கிறது. இதற்காக அமைச்சர்களுக்கு ஏகத்துக்கும் வலுவான அசைன்மென்ட்கள் கொடுக்கப்பட, அமைச்சர்களோ அலறி அடித்து ஓடுவதாக வரும் தகவல்தான் அறிவாலயத்தில் உச்சம் எடுத்திருக்கும் பட்டுவாடா பஞ்சாயத்து.

இது குறித்து நம்மிடம் பேசிய திமுக சீனியர் நிர்வாகி ஒருவர்,‘‘நான்கு முனைப் போட்டியால் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என நினைக்கிறது தலைமை. அதிமுக கூட்டணி உறுதியாகாத வரை தேர்தல் களத்தில் எதிரிகளே இல்லை. ஏழாவது முறையாக எளிதில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று தான் தலைமை நினைத்தது. ஆனால் நிலைமை அப்படி இல்லை.

27
அமைச்சர்களுக்கு அசைன்மென்ட்

அதனால்தான் இந்த தேர்தல் செலவுகளுக்கான அமைச்சர்களை முழுமூச்சாக களத்தில் இறக்கும் பிடிப்புக்கு வந்திருக்கிறது தலைமை. வரக்கூடிய தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற மிக நேர்த்தியாக செலவு செய்தால் ரூ.8 கோடிகள் வரை தேவைப்படும் என்றும் 30 சதவிகித வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்தால் 10 கோடி தேவை என்றும் தலைமை கணக்கிட்டு இருக்கிறது. அதற்கு மேல் அவரவர் தகுதிக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். ஆனால், அமைச்சர்கள் தரப்பிலும் தங்களின் சொந்த வெற்றிக்காக ஒரு தொகுதிக்கு 20 கோடிகள் வரை தாராளமாக செலவு செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

37
மூன்று கேட்டகிரிகள் அமைச்சர்கள்

இதையெல்லாம் தெரிந்து கொண்ட தலைமை, அமைச்சர்கள் சம்பாதித்ததை தேர்தலில் எடுத்துவிட்டு கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்புகிறது. அதற்கு ஏற்ப அமைச்சர்களையும், முக்கிய கட்சி புள்ளிகளையும் ஏ,பி,சி என மூன்று கேட்டகிரிகளாக பிரித்திருக்கிறார்கள். அதாவது கட்சி சீனியர்களும், தேர்தல் செலவுகளில் ஈடுபடுத்த முடியாதவர்களும் ஏ கேட்டகிரி. உதாரணமாக துரைமுருகன், மாஜி அமைச்சர் பொன்முடி, சபாநாயகர் அப்பாவு போன்றோர் ஏ பிரிவு. வளமான துறைகளை கையில் வைத்துக்கொண்டுள்ள அமைச்சர்களை பி- ரகம் எனவும், காற்று வாங்கும் துறைகளை கையில் வைத்திருப்பவர்களையும், அமைச்சர் பதவிக்கு புதிதானவர்களையும் ‘சி’ ரகம் என பிரித்து வைத்திருக்கிறது தலைமை.

அப்படியாக பி பிரிவில் சீனியர் அமைச்சர்களான கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, த.மோ.அன்பரசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சுவாமிநாதன், கீதாஜீவன், தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், சக்கரபாணி ஆகியோருட அன்பில் மகேஷ், காந்தி, நாசர், சிவசங்கர், முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா, ரகுபதி, சேகர் பாபு, அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் ஆகியோரும் பி பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

47
தேர்தல் செலவுக்கு அசைன்மென்ட்

சி பிரிவில் அமைச்சர்கள் கோவை செழியன், பழனிவேல் தியாகராஜன், மெய்ய நாதன், சி.வி.கணேசன், மனோ தங்கராஜ் ஆகியோர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் தலைமை மேற்கண்ட அமைச்சர்களுக்கு தேர்தல் செலவுக்கு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறது. அதாவது வேட்பாளர்களுக்கு கட்சி சார்பில் பிட் நோட்டீஸ்கள் மற்றும் 234 தொகுதிகளுக்கும் பொதுவான போஸ்டர்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மற்றபடி தலைமையில் இருந்து செலவுக்கு எதுவும் வழங்கப்படும் பாடாது என சொல்லப்படுகிறது.மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர்களாக இருக்கக் கூடியவர்களே செலவு செய்து வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருக்கிறது.

57
யாருக்கு எத்தனை தொகுதிகள்?

அதன்படி மாற்றி அமைத்து செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் கொங்கு மண்டலம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் மட்டும் மொத்தம் 49 தொகுதிகள் வருகின்றன. இன்னொரு முக்கிய அமைச்சர் எ.வ.வேலு கட்டுப்பாட்டில் வடமாவட்டங்கள் இருக்கின்றன. அவர் வசம் 53 தொகுதிகளை கொடுத்திருக்கிறது தலைமை. இப்படி தமிழக முழுவதும் மாவட்ட வாரியாக தொகுதிகளை பிரித்து அமைச்சர்கள் வசம் ஒப்படைத்து இருக்கிறது தலைமை. தலைநகர் சென்னையை பொறுத்த வரை மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் எட்டு தொகுதிகள் சேகர்பாபுவிடமும், மீதம் எட்டு தொகுதிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடமும் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

சிட்டிங் எம்எல்ஏக்கள் வேலு, ஆர்.டி.சேகர் மாவட்ட பொறுப்பாளர்களாக இருந்த போதிலும் அவர்களை தலைமை முழுமையாக நம்பவில்லை என சொல்லப்படுகிறது. எனவே இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தொகுதிகளில் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் பொறுப்பு அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியனிடமே கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட முக்கிய அமைச்சர்கள் தரப்பில் தேர்தலுக்காக செலவு செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், சி பிரிவு அமைச்சர்களான கோவி செழியன், பழனிவேல் தியாகராஜன், மேகநாதன் இதுவரை திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற நிதி உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

67
அமைச்சர்களின் ஏக்கக் குறல்

ஆனால் முக்கிய அமைச்சர்களை தவிர பெரும்பாலான அமைச்சர்களோ கடந்த ஐந்து வருடங்களில் எங்களை எங்கே சுதந்திரமாக செயல்பட விட்டீர்கள்? டாஸ்மாக் தொடங்கி பெரிய டெண்டர்கள் வரை சென்ட்ரலைஸ்ட் என்ற பெயரில் முக்கியமானவர்களே எடுத்துக் கொண்டார்கள். அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி தேர்தல் செலவுகளை பார்க்க முடியும்? 2021 இல் நாம் ஆட்சிக்கு வந்ததும் கடந்த பத்து வருடங்களாக எதிர்கட்சியாக இருந்து கடுமையாக உழைத்து செலவு செய்தோம். அதனால் ஆட்சிக்கு வந்ததும் இனி நமக்கு சம்பாதிக்க வழி பிறந்து உள்ளது என்று நினைத்தோம். ஆனால் எங்களின் எதிர்பார்ப்பு சில மாதங்களிலேயே பொய்த்து போனது.

ஆட்சி அமைந்த ஒரு சில மாதங்களிலேயே அனைத்து விதமான ஆதாயங்களும் ஒரே கைகளுக்கு சென்றது. இதற்கு சென்ட்ரலைஸ்ட் என்று பெயரும் வைக்கப்பட்டது. உதாரணத்துக்கு பார் எடுத்து சம்பாதிக்கலாம் என்று காத்திருந்த திமுகவினர் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மாற்று துறைகளிலும் இதே நிலைதான். இதற்கிடையே உதயநிதி துணை முதலமைச்சர் ஆன பிறகு இருமுனை அதிகார மையங்கள் உருவாகின. அமைச்சகத்தின் மிகப்பெரிய நிதிசார்ந்த முடிவுகள் எல்லாம் அந்தந்த அமைச்சர்களால் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தேர்தலுக்கு எங்கள் ஒவ்வொருவரிடமும் மிகப்பெரிய அளவில் ஸ்வீட் பாக்ஸ்கள் கேட்கப்பட்டுள்ளன.

77
அலறி ஓடும் அமைச்சர்கள்

ஆட்சி அமைத்திருந்தே அனைத்து துறைகளும் சென்ட்ரலைஸ்ட் ஆக்கப்பட்ட விட்டன எங்களுக்கு கமிஷன் மட்டும் தானே கொடுக்கப்பட்டது. இப்போது தேர்தல் செலவுக்கு எங்களிடம் கேட்டால் நாங்கள் எங்கே செல்வது? ஏற்கனவே வாரம் ஒரு மாநாடு, தினம் ஒரு பிரச்சாரக் கூட்டம் என்று ஏகப்பட்ட கோடிக்கணக்கில் செலவுகள் செய்து கொண்டிருக்கிறோம். சமீபமாக மண்டல வாரியாக இளைஞரை கூட்டம் மகளிர் அணி கூட்டம் நடத்தப்படுகிறது. அவற்றுக்கும் நாங்கள் தான் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இப்போது எங்கள் ஒவ்வொருவரிடமும் ஐந்து முதல் 15 தொகுதிகள் வரை ஒப்படைத்து செலவு செய்ய சொல்கிறார்கள்.

இதனால் ஒரு அமைச்சர் ரூ.100 கோடிகளை இறக்க வேண்டும். அவ்வளவு கோடிகளுக்கு நாங்கள் எங்கே போவோம் என்று கொந்தளிக்கிறார்கள். மேலும் தங்களுடைய தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்தும் அமைச்சர்கள் மற்ற தொகுதிகளில் செலவுகளுக்கு இதுவரை எந்த கமிட்மெண்ட் தரவில்லை’’ என்று விரிவாக சொல்லி முடித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories