Gold Premium Bus: டெல்லி, மும்பை போன்ற நகரங்களை போன்று சென்னையிலும் கோல்ட் பிரீமியம் என்ற புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்து கழகம் (MTC) என்பது சென்னை மாநகரிலும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பேருந்து சேவைகளை வழங்கி வருகிறது. இப்பேருந்து மூலம் தினமும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என தினமும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். இவர்களில் 70,000 பேர் வரை விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ.1000 மற்றும் ரூ.2000 மாதாந்திர பயணச்சீட்டின் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். அதாவது ரூ. 1,000 பாஸ் என்பது சாதாரண மற்றும் விரைவுப் பேருந்துகளில் செல்லுபடியாகும். அதேபோல் ரூ. 2,000 பாஸ் ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் பயணிக்கலாம். தற்போது புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள், தாழ்தள மின்சாரப் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
26
கோல்ட் பிரீமியம்
இந்நிலையில் டெல்லி, மும்பை போன்ற நகரங்களை போன்று சென்னையிலும் கோல்ட் பிரீமியம்' (Gold Premium) என்ற புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்து சேவையை சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கட்டணம் மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
36
புதிய பேருந்துகளின் சிறப்பு அம்சங்கள்
தங்க நிறத் தோற்றத்தில் (Gold Livery)மற்ற சாதாரண மற்றும் ஏசி பேருந்துகளில் இருந்து மாறுபட்டு, இந்த பேருந்துகள் கண்ணைக் கவரும் தங்க நிறத்தில் வடிவகைப்பட்டுள்ளது. சொகுசு இருக்கைகள் அதுமட்டுமல்ல இந்த பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை.
கோல்ட் பிரீமியம் பேருந்தில் இலவச வைஃபை (Wi-Fi), மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், மற்றும் ஜிபிஎஸ் (GPS) கண்காணிப்பு உள்ளிட்ட நவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இந்த பேருந்து முக்கிய நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும்.
56
முக்கிய வழித்தடங்கள்
முதற்கட்டமாக, போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள மற்றும் ஐடி காரிடார் பகுதிகளில் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதாவது கோயம்பேடு - சிறுசேரி ஐடி பார்க் இடையே இயக்கப்படும் P570S மற்றும் கிளாம்பாக்கம் முதல் திருவான்மியூர் இடையே இயக்கப்படும் P91 ஆகிய இரு வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
66
முன்பதிவு செய்துவது எப்படி?
நடத்துனர் இல்லாத பேருந்து என்பதால் சென்னை ஒன் (Chennai One) செயலி மூலம் முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்வது அவசியம். சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக இருக்கைகள் இடம் பெற்றுள்ளன.
கட்டணங்கள் விவரம்
இந்த பேருந்தில் குறைந்தப்பட்ச கட்டணமாக 50 ரூபாயும், அதிகப்பட்சமாக 150 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வரவேற்பை பொருத்து நகரின் பிற பகுதிகளுக்கும் இந்த பேருந்து சேவை அறிமுகம் செய்யப்படும் என்று எம்டிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.