Published : Jul 30, 2025, 07:37 AM ISTUpdated : Jul 30, 2025, 07:40 AM IST
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டிஜிட்டல் Store Value Pass (SVP) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் இந்த SVP-ஐ பயன்படுத்தி 20% தள்ளுபடியில் பயணம் செய்யலாம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க நீண்ட நேரம் தேவைப்படுகிறது. இதனால் காலதாமதமாக பணிக்கு செல்லும் நிலையானது தொடர்ந்தது. இந்த சூழலில் தான் மெட்ரோ ரயில் சேவையானது சென்னையில் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் குறைவான மக்கள் மட்டுமே மெட்ரோ ரயில் பயணத்தை மேற்கொண்ட நிலையில் தற்போது மின்சார ரயிலுக்கு இணையாக கூட்டமானது நிரம்பி வழிகிறது. அந்த வகையில் பயணிகளுக்கு நாளுக்கு நாள் புதிய புதிய வசதிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது.
24
டிஜிட்டல் முறையில் டிக்கெட்
அந்த வகையில் மெட்ரோ ரயில் டிக்கெட் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், நவம்பர் 2022 முதல் Digital Store Value Pass (SVP) வசதியை அறிமுகப்படுத்தியது.
அனைத்து மெட்ரோ பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான மொபைல் செயலியைப் (CMRI Mobile App) பதிவிறக்கம் செய்து தங்களுது மொபைல் எண்ணை பதிவு செய்து SVP-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். SVP-ஐ சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் மட்டுமே வாங்க முடியும்.
34
மெட்ரோ ரயில் 20 சதவிகிதம் தள்ளுபடி
ரீசார்ஜ் செய்யப்பட்ட இறுதி நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இது மெட்ரோ பயணிகளுக்கு எளிதான மற்றும் டிஜிட்டல் பயண முறையை வழங்குகிறது. Store Value Pass SVP-ஐ பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்கள் பயணக் கட்டணத்தில் 20% தள்ளுபடியை பெறலாம்.
இந்த Store Value Pass பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புது QR குறியீட்டை வழங்குவதன் மூலம் மெட்ரோ அமைப்பிற்குள் பாதுகாப்பான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட அணுகலை அனுமதிக்கிறது. இந்த Store Value Pass-ல் குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.3000 வரை டாப்-அப் செய்து கொள்ளலாம்.
பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத் தொகை கழிக்கப்படும். மீதமுள்ள தொகை இருப்புத் தொகையாக வைக்கப்படும். கூடுதலாக பயணிகள் Store Value Pass-ஐ சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாகன நிறுத்துமிடங்களில் பயன்படுத்தலாம்.
இது தடையற்ற போக்குவரத்து பயண அனுபவத்தை வழங்குவதோடு பயணிகளுக்கு கூடுதல் தள்ளுபடி களையும் வழங்குகிறது. இந்த (Store Value Pass) டிஜிட்டல் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயணச் சீட்டு முறையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.