சூப்பர் அறிவிப்பு.. மாதம் ரூ1000.! அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல இனி இவர்களுக்கும் உண்டு..

First Published Jul 11, 2024, 11:37 AM IST

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமில்லை, வருகிற கல்வியாண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

"புதுமைப் பெண்"

தமிழக அரசு சார்பாக மகளிர் உரிமை தொகையாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி உதவி தொகையாக ஆயிரம் ரூபாயும், மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும்,  கல்வி அறிவு தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக "புதுமைப் பெண்" என்னும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 

மாதம் ஆயிரம் ரூபாய்

அதன் படி அரசு பள்ளிகள் மட்டுமல்ல அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக "புதுமைப் பெண்" திட்டத்தில், அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. 

Latest Videos


அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கு உதவி தொகை

இத்திட்டத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் 11.015 மாணவிகள் மாதம் ரூ. 1000/- பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தால் பயன்பெற்றனர். இதனைத் தொடர்ந்து, வருகிற 2024-25ஆம் கல்வியாண்டு முதல் "புதுமைப் பெண்" திட்டத்தின் வாயிலாக அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தற்பொழுது விரிவுப்படுத்தப்பட்டு, 

உடனே விண்ணப்பியுங்கள்- ஆட்சியர்

அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்த மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எனவே. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணவியர் 'புதுமைப் பெண்" திட்டத்தில் பயன்பெற அந்தந்தக் கல்லூரியின் சிறப்பு அலுவலர் (Nodal Officer) வாயிலாக விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!