வழக்கமாக சென்னை புத்தக கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு அனுமதி இலவசம் என பபாசி அறிவித்துள்ளது சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புத்தக கண்காட்சியை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.
1,000 அரங்குகள்
சென்னை புத்தக கண்காட்சியில் மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் புகழ்பெற்ற பதிப்பகங்களின் புத்தகங்கள், பென்குயின், ஹார்ப்பர் காலின்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களின் பதிப்பகங்கள், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. திருநங்கைகளால் நடத்தப்படும் 'Queer' பதிப்பகத்திற்கு தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது பெரும் பாராட்டை பெற்றுள்ளது.