இத்தகைய சிறப்புமிக்க மெரினாவில் புற்றிசல் போல் வித விதமான கடைகள் பல்கி பெருகி விட்டன. மக்கள் நடந்து செல்ல முடியாதபடி நடைபாதைகள், மணற்பரப்புகள் என எங்கிலும் கடைகள் ஆக்கிரமித்து விட்டன. எங்கும் கடைகள் நிறைந்து விட்டதால் சாலைகளில் செல்லும்போது கடல் அன்னையின் அழகை ரசிக்க முடியவில்லை.
மெரினா கடற்கரையைச் சர்வதேச தரத்திற்கு மாற்றும் நோக்கில், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கடைகளை முறைப்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.
மெரினா ஷாப்பிங் மால் அல்ல
சில நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம், 'மெரினா கடற்கரை ஷாப்பிங் மாலோ, பஜாரோ அல்ல. அது மக்கள் பொழுதுபோக்கும் இளைப்பாறுவதற்கான இடம். இனி மெரினாவில் உணவுப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி'' என்று அதிரடியாக உத்தரவிட்டது.