பின் தங்கும் சென்னை விமான நிலையம்.! அதிருப்தி தெரிவிக்கும் பயணிகள்- காரணம் என்ன.?

Published : Mar 12, 2025, 11:06 AM ISTUpdated : Mar 12, 2025, 11:08 AM IST

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, உடைமைகளை பெற நீண்ட நேரம் காத்திருத்தல், லிப்ட் வசதிகள் குறைவு, மற்றும் தூய்மையற்ற கழிவறைகள் போன்ற குறைபாடுகள் உள்ளன.

PREV
16
பின் தங்கும் சென்னை விமான நிலையம்.! அதிருப்தி தெரிவிக்கும் பயணிகள்- காரணம் என்ன.?

Passengers at Chennai Airport have raised multiple concerns : தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மீனம்பாக்கம் திரிசூலம் பகுதியில் அமைந்துள்ளது சர்வதேச விமான நிலையம், கடந்த 2015ம் ஆண்டு அளவில் சென்னையில் விமானத்தை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை 2.2 கோடியாக இருந்தது.

அது தற்போது படிப்படியாக அதிகரித்து 2025ஆம் ஆண்டில் 3.5 கோடியை நெருங்கியுள்ளது. அதே நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் பீக் அவர்ஸ் எனப்படும் முக்கியமான நேரங்களில், ஒரு மணி நேரத்திற்கு 12,000 பயணிகளும் 24 அல்லது 25 விமானங்களில் வந்து செல்கின்றது. 

26
சென்னை விமான நிலைய மேம்பாடு

இதனை மேலும் வலுப்படுத்த சென்னை விமான நிலையில் பல கட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் 3 டெர்மினல்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில் 4 வது டெர்மினல் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவடையும் என கூறப்படுகிறது.

இதனால் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நாள் தோறும் சென்னை விமான நிலையத்திற்கு தினமும், 50,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர்.

36
விமான நிலையம் தனியார் மயம்

இருந்த போதும் உரிய திட்டமிடம் பயணிகளை கையாள்வதில் சிக்கல் போன்ற காரணங்களால் மற்ற மாநில விமான நிலையங்களை விட சென்னை விமான நிலையம் பின் தங்கி செல்கிறது. குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலான விமான நிலையங்கள் தனியார் மயமாகி விட்டன.

சென்னை விமான நிலையம் இன்னும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் பயணிகளுக்கு உரிய வசதிகளை இல்லாமல் சிரமமான நிலை நீடிக்கிறது. குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பயணிகள் பெரிய அளவில் சிக்கல்களை சந்திக்கும் நிலை உள்ளது.

46
அதிருப்தியில் சென்னை விமான பயணிகள்

அதிகமான லக்கேஜ் உடன் வரும் பயணிகள் வாகனங்கள் ஏறுவதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கும் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. மேலும் பயணிகளுக்கு போதுமான லிப்ட் வசதிகளும் இல்லாத நிலை நீடிக்கிறது. விமானத்தில் வரும் பயணிகள் உடைமைகளை பெறுவதற்காக ஒரு மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை இருப்பதாக விமர்சிக்கின்றனர். 

மேலும் சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த சர்வதேச விமானங்களும் பெரும் அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் நேரடி சேவை இல்லை.

56
வெளிநாடுகளுக்கு நேரடி சேவை நிறுத்தம்

சென்னையில் ஏற்கனவே இயங்கிய சேவைகள் பறிக்கப்பட்டு, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற விமான நிலையங்களுக்கு சென்றுள்ளன. ஆனால் தனியார் வசம் உள்ள விமான நிலையங்களில் பல்வேறு சிறப்பான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு, நேரடி விமான சேவை உள்ளது. தனியார் கட்டுப்பாட்டில் உள்ள பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள் தூய்மையாகவும் ,போதிய அடிப்படை வசதிகள் இருப்பதாக சென்னைக்கு வரும் விமான பயணிகள் தெரிவிக்கின்றனர். 
 

66
பயணிகள் கூறும் காரணங்கள் என்ன.?

மேலும் பெங்களூரு விமான நிலையத்திற்கு என, பிரத்யேகமாக வர்த்தக மேம்பாட்டு பிரிவு செயல்படுகிறது. அதே நேரம் சென்னையில் இது போன்ற பரிவு இல்லாத காரணத்தால் பல வித வசதிகள் இல்லாத நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கழிவறை வசதிகள் சரியான் முறையில்  மேலாண்மை செய்யப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டும் கூறப்படுகிறது, 

Read more Photos on
click me!

Recommended Stories