தம்பதி மீது கார் மோதிய விபத்தில் கணவன் பலி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உறவினர் சென்னையில் கைது!

Published : Mar 12, 2025, 10:18 AM IST

சென்னையில் கார் விபத்தில் ஒருவர் பலி. விபத்தை ஏற்படுத்தியவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உறவினர் என தெரியவந்துள்ளது. 

PREV
14
தம்பதி மீது கார் மோதிய விபத்தில் கணவன் பலி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உறவினர் சென்னையில் கைது!
Car Accident

சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அரவிந்த் ரவிச்சந்திரன். கடந்த 9ம் தேதி சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி ஆடி காரில் சென்றுள்ளார். அப்போது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள ஓங்கூர் பாலம் அருகே வந்துக்கொண்டிருந்த போது மேல்மலையனூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் நாராயணசாமி (39), மீனா (31) ஆகியோர் சென்றுக்கொண்டிருந்ததனர். 

24
Police investigation

அப்போது கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.  இதில், நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  படுகாயமடைந்த அவரது மனைவி மீனா அச்சிரப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  விபத்தை எற்படுத்திவிட்டு காரை நிறுத்தாமல் அரவிந்த் விழுப்புரம் செல்லாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளார்.

34
Police Arrest

இந்த விபத்து குறித்து உயிரிழந்த நாராயணசாமியின் அண்ணன் கிருஷ்ணன் (44) என்பவர் ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது என்று தெரியாமல் போலீசார் திணறி வந்தனர். ஓங்கூர் சுங்கச்சாவடி சிசிடிவியை ஆய்வு செய்ததில் அரவிந்த் கார் விழுப்புரம் நோக்கி சென்ற உடனே சென்னை திரும்பியது தெரிய வந்தது. பின்னர் தொலைபேசி மூலம் அரவிந்தை தொடர்பு கொண்டு விசாரித்த போலீசார் விபத்து ஏற்படுத்தியதை உறுதி செய்தனர். இதனையடுத்து அரவிந்த் ரவிச்சந்திரனை ஒலக்கூர் காவல் நிலையம் வரவழைத்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

44
Nirmala Sitharaman

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உறவினர் என்றும் அரவிந்த் அம்மாவின் சித்தி மகள் தான் நிர்மலா சீதாராமன் என்று கூறியதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிரிாந்தவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் கெங்கணந்தல் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories