Astrologer Warning For Thalapathy Vijay Fans: பிரபல ஜோதிடர் ஷெல்வி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
பிரபல ஜோதிடர் ஷெல்வி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா மற்றும் விஜய்யின் தாக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவர் விரிவான பதிலளித்துள்ளார்.
25
ஏப்ரல் 23 கலவரம் எச்சரிக்கை
விஜய்யின் அரசியல் வருகை நிச்சயம் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், கடந்த 9 மாதங்களாகவே இதை பற்றித் தான் கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்க்கு தற்போது ‘நீசபங்க ராஜயோகம்’ நடப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட இக்கட்டான சூழ்நிலையில் கிரகங்கள் வலிமை பெற்று, மிகப்பெரிய வெற்றி, செல்வம் மற்றும் புகழைத் தரும் யோகம் இதுவென விளக்கியுள்ளார். இனி விஜய்யின் அரசியல் ஆட்டம் தொடங்கும் என்பது அவரது கணிப்பாக உள்ளது.
இருப்பினும், விஜய்யின் ஜாதகம் எந்த அளவுக்கு வலிமையானதோ, அதே அளவுக்குச் சில விபரீதங்களையும் கொண்டுள்ளதாக ஷெல்வி எச்சரித்துள்ளார். குறிப்பாக, விஜய் தனது வாகனத்தில் வெளியே வந்தாலே ‘துர்மரணங்கள்’ தொடரும் என்றும், அதைத் தடுப்பது கடினம் என்றும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.
35
Astrologer warning for Thalapathy Vijay fans
விஜய்யின் ஜாதகம் அவ்வளவு பவர்ஃபுல்லாக இருப்பதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது அவருக்குப் பெரிய சவாலாக இருக்கும். அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு இருந்த அதே அளவிலான மக்கள் செல்வாக்கு விஜய்க்கு இருப்பதாகவும், கடவுளின் ஆசீர்வாதம் இருந்தாலே இத்தகைய மக்கள் ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். விஜய்யைப் பார்க்க வரும் கூட்டத்தில் உயிரிழப்புகள் நேரிட்டாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் திரண்டு வருவதைக் கட்டுப்படுத்த முடியாது என்பது அவரது கருத்து.
45
தமிழக வெற்றிக் கழகம் லேட்டஸ்ட் செய்திகள்
பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, விஜய் திறந்த வெளியில் ஒரு கூட்டத்தை நடத்திப் பேசுவதுதான் அவருக்குப் பாதுகாப்பு தரும் என்றும், ரோடு ஷோ எனப்படும் வாகனப் பேரணிகள் ஆபத்தானவை என்றும் அவர் எச்சரித்துள்ளார். விஜயுடன் ஒரு பெரிய குழுவே இருந்தாலும், உச்சநீதிமன்றம் வரை சென்று முறையான உத்தரவுகளைப் பெற்று பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; இல்லையெனில் கூட்டத்திற்கு வருபவர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
55
TVK Vijay political future astrology 2026
குறிப்பாக ஏப்ரல் 20 மற்றும் 23-ஆம் தேதிகள் வரை கலவரமான சூழலும், பாதிப்புகளும் இருக்க வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார். தேர்தல் முடிவுகளில் விஜய் முதலிடம் அல்லது இரண்டாம் இடத்தைப் பிடிப்பார் என்று கூறிய ஷெல்வி, தற்போது மக்களிடையே ஆளுங்கட்சிக்கு எதிராகப் பலமான எதிர்ப்பு மனநிலை நிலவுவதாகவும், இதை எதிர்க்கட்சிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டுப் பார்க்கும்போது, இத்தகைய ஒரு மக்கள் எதிர்ப்பு இனி வரும் காலங்களில் கிடைப்பது அரிது என்றும் அவர் தனது ஜோதிடப் பார்வையை முன்வைத்துள்ளார்.