சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவரும் பயோமெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வருகையைப் பதிவு செய்யாதவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்பதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Biometrics are mandatory for transport employees : வாடகை கார்கள், பைக்குகள், மெட்ரோ ரயில்கள் என எது வந்தாலும் மக்களின் நம்பிக்கைக்குரியதாகவும், குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வதற்கு அரசு பேருந்துகள் பெரும் உதவியாக உள்ளது. எந்த இடத்தில் இருந்தும் எங்கு வேண்டும் என்றாலும் பயணம் செய்யலாம்.
அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவுப்போக்குவரத்து கழகத்தில் 41,000 க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் தினசரி 5,190 க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கப்படுகிறது.
25
tamilnadu bus
காலதாமதமாக வரும் போக்குவரத்து ஊழியர்கள்
சென்னை மாநகரத்தில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. எனவே இந்த பேருந்துகளை இயக்கவும், பராமரிக்கவும் ஆயிரக்கணக்கான டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு சில ஊழியர்கள் சரியான நேர்த்தில் பணிக்கு வருவதில்லை,
பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்குவதில்லை என புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்து கழகம் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் வருகை பதிவை எளிமையாக்கவும் பயோ மெட்ரிக் முறையை அறிமுகம் செய்துள்ளது.
35
Chennai Metropolitan Transport Corporation
பயோ மெட்ரிக் கட்டாயம்
இதனையடுத்து சென்னை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போக்குவரத்து கழக இயக்குனர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன் படி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது உரிய வகையில் பின்பற்றவில்லையென தகவல் வெளியானது. இதனையடுத்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகம்,
45
biometric attendance
பயோமெட்ரிக் மூலம் பதிவு
அனைத்து பணிமனைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஏப்ரல் 21ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
55
Transport employees salary deduction
சம்பளம் பிடித்தம் எச்சரிக்கை
எனவே பயோமெட்ரிக் மூலம் தங்களது வருகையை பதிவு செய்யாத போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் கட் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.