நாகலாபுரம் மலைத்தொடர் சுமார் 213 அடி உயரம் உள்ளதால் டிரக்கிங் விரும்பிகளுக்கு ஏற்ற இடமாகும். வனத்தில் சுத்தமான காற்றை சுவாசித்து அருவியில் குளியல் போடுவது சொர்க்கத்தில் மிதக்கும் உணர்வை தரும்.
தமிழகத்தில் கோடை காலம் மெல்ல மெல்ல தொடங்கியுள்ளது. பல்வேறி இடங்களில் வெயில் கொளுத்தியெடுக்க ஆரம்பித்துள்ளது. சென்னையில் வெயிலின் தாக்கம் எந்தளவு இருக்கும்? என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
சூட்டை தணிக்க ஊட்டி, செல்லலாமா? இல்லை கொடைக்கானல் செல்லலாமா? என சென்னைவாசிகள் இப்போதே திட்டமிட ஆரம்பித்துள்ளனர். சென்னை மக்கள் இனி வெயிலை சமாளிக்க ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டியதில்லை. சென்னைக்கு பக்கத்திலேயே இருக்கும் 3 மலைவாசஸ்தலங்கள் குறித்து பார்ப்போம்.
24
நாகலாபுரம் அருவி
ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் நாகலாபுரம் அருவி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வெறும் 70 கிமீ தூரத்தில் தான் இந்த அருவி உள்ளது. நாகலாபுரம் மலைத்தொடர் சுமார் 213 அடி உயரம் உள்ளதால் டிரக்கிங் விரும்பிகளுக்கு ஏற்ற இடமாகும். வனத்தில் சுத்தமான காற்றை சுவாசித்து அருவியில் குளியல் போடுவது சொர்க்கத்தில் மிதக்கும் உணர்வை தரும்.
எப்படி செல்லலாம்?
நாகலாபுரம் அருவிக்கு சென்னையில் இருந்து கார் மூலமும், பைக் மூலமும் செல்லலாம். அரசு பேருந்துகளில் நாகாலாபுரம் சென்று விட்டு அங்கு இருந்து ஆட்டோ அல்லது கார்களில் அருவியை அடையலாம். ரயில் நிலையம் என்று பார்த்தால் நகரி ரயில் நிலையத்தில் இருந்து நாகாலாபுரம் 29 கிமீ தொலைவில் உள்ளது. தமிழக, ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டையில் இருந்து நாகாலாபுரம் 13 கிமீ தொலைவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
34
ஹார்ஸ்லி ஹில்ஸ்
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி என்ற இடத்தின் அருகே ஹார்ஸ்லி ஹில்ஸ் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 274 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த சிறு மலைத்தொடர் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1290 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் செல்லும்போது உங்கள் மனம் காற்றில் மிதக்கும்.
எப்படி செல்வது?
சென்னையில் இருந்து வேலூர், சித்தூர், மதனப்பள்ளி வழியாக ஹார்ஸ்லி ஹில்ஸ் சென்றடையலாம். சென்னையில் இருந்து சித்தூருக்கு ரயிலில் சென்று அங்கு இருந்து கார்களிலும் செல்லலாம். மதனப்பள்ளியில் இருந்து ஹார்ஸ்லி ஹில்ஸ் மலைத்தொடருக்கு ஆந்திர அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து 19 கிமீ தூரத்தில் ஏலகிரி மலை அமைந்துள்ளது சென்னையில் இருந்து 230 கிமீ தொலைவில் அழகாக வீற்றிருக்கும் ஏலகிரி பசுமையான பள்ளத்தாக்குகள், மனதை கொள்ளை கொள்ளும் ஏரிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு பாராகிளைடிங்கும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து எப்படி செல்வது?
ஏலகிரிக்கு சென்னையில் இருந்து காரில் 4 மணி நேரத்தில் சென்று விடலாம். மலைப்பாதையில் கொண்டை ஊசி வழியாக பயணிப்பது பரவச நிலையை கொண்டு வரும். சென்னையில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரயிலகளில் சென்று அங்கு கார் மூலமாகவும் ஏலகிரி சென்றடையலாம். ஜோலார்பேட்டையில் இருந்து ஏலகிரிக்கு அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.