செம ஹேப்பி நியூஸ்! வரும் 16ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு.!

First Published | Aug 8, 2023, 7:02 AM IST

ஆடி அமாவாசை மற்றும் வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 16ம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை அன்று குழித்துறை நகராட்சியால்  தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களின் நினைவாக வாவுபலி தர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி ஆகஸ்ட் 16ம் கன்னியாகுமரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை  என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குமரி மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.


இதனை ஈடும் செய்யும் வகையில் செப்டம்பர் 9ம் தேதியன்று வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே சுதந்திர தினவிழா என்பதால் அன்று அரசு விடுமுறை. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை என்பது குறிப்பித்தக்கது. ஆடி மாதம் பல ஆண்டுகளுக்கு பிறகு 2 அமாவாசை வருகிறது.

Latest Videos

click me!