துப்புரவு தொழிலாளர்களை விமர்சித்தேனா? சவுக்கு சங்கர் கூறியது என்ன? அவரே சொன்ன தகவல்!

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் குறித்து பேசியதுதான் காரணமா? செல்வப்பெருந்தகை மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு.

Attack on Savukku Shankar house! What is the background tvk
youtuber savukku shankar

அரசியல் விமர்சகரும் பிரபல யூடியூப்பருமான சவுக்கு சங்கர் திமுக ஆட்சியையும், முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் ரெட் பிக்ஸ் என்கின்ற யூடியூப் தொலைக்காட்சியில் பெண் காவல்துறையினரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பெண் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை கடந்த ஆண்டு மே 4ம் தேதி தேனியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். 

Attack on Savukku Shankar house! What is the background tvk
savukku shankar

இந்நிலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் 50 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து சாக்கடையையும், மலத்தையும் கொட்டியது மட்டுமல்லாமல் அவரது தாயை தகாத வார்த்தை பேசு அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் அவரது ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அப்படி எந்த வீடியோவில் துப்புரவு தொழிலாளர்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசியது என்ன என்பது குறித்து அவரே விளக்கமளித்துள்ளார். 

இதையும் படிங்க: வீட்டை சுற்றி வளைத்து தாக்குறாங்க.! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- நடந்தது என்ன.?


savukku shankar house Attack

நான் துப்புரவு தொழிலாளர்களை இழிவாக பேசியதாக சொல்லியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். துப்புரவு தொழிலாளர்களுக்கு வாகனம் வாங்கி தருவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி உடன் 239 கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனத்தை வழங்கினர். இதில், 87 பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள், மீதமுள்ள அத்தனை பேரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் பினாமிகள், வாகனங்ளை மெட்ரோ வாட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வரும் பணத்தை தனியார் கம்பெனியில் முதலீடு செய்து துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.20,000 கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை எடுத்துக் கொள்கிறார் என நான் குற்றம்சாட்டி இருந்தேன். இது தொடர்பாக ஆதாரங்களையும் காண்பித்திருந்தேன். 

Savukku Shankar News

துப்புரவு தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஏமாற்றி கொள்ளையடிக்கிறார் என துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாகவே பேசினேன். நான் அவர்களை இழிவாக எந்த இடத்திலும் பேசவில்லை. செல்வப்பெருந்தகையும், ரவிக்குமார் நாராயணன் என்பவரும் சேர்ந்துகொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு சேரவேண்டிய 230 வாகனங்களை தங்களுக்கு தெரிந்தவர்கள் பேரில் பதிவு செய்து ஏமாற்றுகிறார் என சொல்லியிருந்தேன் என கூறியுள்ளார். 

இதையும் படிங்க: Savukku Shankar | சவுக்கு ஷங்கர் வீடு மீது தாக்குதல்! நடந்தது என்ன? சவுக்கு சங்கர் தயார் பேட்டி!

Selvaperunthagai

செல்வப்பெருந்தகை, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அவர்களும் சேர்ந்து தூண்டிவிட்டுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என குற்றம்சாட்டியுள்ளார். என் அம்மா பெயரில் உள்ள சொந்த வீட்டுக்கு சீல் வைத்துள்ளார்கள். எனவே இந்த புதிய வீட்டுக்கு நான் குடிவந்து 3 மாதமே ஆகிறது. காவல்துறையை தவிர நான் இந்த வீட்டில் இருப்பது யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கையில் தூய்மைப்பணியாளர்கள் எப்படி நேராக என் வீட்டுக்கு வந்து இறங்குகிறார்கள் என தெரிவித்துள்ளார். 

Latest Videos

vuukle one pixel image
click me!