Aavin Milk
ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் சார்பில், தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆவின் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Aavin ice Cream
தமிழ்நாடு முழுவதும் மாதந்தோறும் 1.5 கோடி அளவில் ஐஸ் கிரீம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் விற்பனையை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு பொதுமக்கள் விரும்பும் வகையில் மேங்கோ மற்றும் கிரேப் டூயட் வகைகளை இரண்டு வாங்கினால் Rs.10/-தள்ளுபடி விலையில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 31ம் தேதி வரை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு சூப்பர் நியூஸ்! அறிமுகமாகிறது புதிய வகையான ஆவின் பால்! எப்போதில் இருந்து தெரியுமா?
Aavin Ice Cream News
மேலும் ஐஸ் கிரீம் வகைகளை விற்பனை செய்ய தமிழ்நாடு முழுவதும் மொத்த விற்பனையாளர்களை நியமனம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஐஸ் கிரீம் விற்பனையில் ஆர்வமுள்ளவர்கள் தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.aavinmilk.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும். அணுகவேண்டிய தொலைபேசி எண்: திரு.சதிஷ், உதவிப் பொது மேலாளர்
9043099905.