இரண்டு நாளில் 25ஆயிரம் பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- வெளியான சூப்பர் அறிவிப்பு

Published : Feb 20, 2025, 08:16 AM IST

தமிழகத்தில் காஞ்சிபுரம், தூத்துக்குடி, சங்கராபுரம் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம்களில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன.

PREV
16
இரண்டு நாளில் 25ஆயிரம் பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- வெளியான சூப்பர் அறிவிப்பு
job opportunities

ஆண்டு தோறும் பல லட்சம் இளைஞர்கள் படிப்பு முடித்து வேலை தேடி பல ஊர்களுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக தேர்வுகள் நடத்தி அரசு பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. மேலும் தனியார் துறை நிறுவனங்களிலும் பல்வேறு மாநிலங்களில் தங்களது நிறுவனங்களை தொடங்கி வருகிறது.

தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் புதுப்புது நிறுவனங்கள் தங்களது கிளைகளை தொடங்கியுள்ளது. அதன் படி தங்களது நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசோடு இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.  
 

26
காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

அந்த வகையில் இந்த வாரம் காஞ்சிபுரம், சங்கராபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 23,02,2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயின்ட் ஜோசப் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மயிலாம்பாறை, சங்கராபுரம். (அரசு போக்குவரத்து பணிமனை அருகில்) வளாகத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

36
10ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடம்

சிறப்பு அம்சங்கள்

* 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்

* 10,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

* மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

தனியார் துறை வேலைவாய்ப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயக்குறிப்பு (Bio Data) ஆகியவற்றுடன் நேரில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதிகள்

எட்டாம் வகுப்புகள் முதல் பட்டப்படிப்பு வரை ஐ.டி.ஐ./ டிப்ளமோ/ நர்சிங்/பொறியியல்/ஆசிரியர்கள்

மேலும் விவரங்களுக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கள்ளக்குறிச்சி,

04151-295422/8807204322

 

46
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு

இதே போல மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 22,02,2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வ.உ.சி, கலைக்கல்லூரி, மில்லர்புரம், தூத்துக்குடி. வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு அம்சங்கள்

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு  5,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

56
5ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடம்

சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் கல்விச் சான்றிதழ்கள் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சுயவிபர குறிப்புகளுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை /ஐ.டி.ஐ./டிப்ளமோ / நர்சிங் பார்மஸி/பொறியியல் பட்டப் படிப்பு

வயது வரம்பு

18 வயது முதல் 40 வயது வரை

மேலும் விவரங்களுக்கு

0461-2340159

66
காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

அடுத்ததாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22,02,2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இராணி அண்ணாதுரை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் டாக்டர் பி.எஸ். ஸ்ரீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் - 631 502. வளாகத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு அம்சங்கள்

* 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்

* 10,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

கல்வித்தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை /ஐ.டி.ஐ./டிப்ளமோ / நர்சிங் பார்மஸி/பொறியியல் பட்டப் படிப்பு

விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio Data) ஆகியவற்றுடன் நேரில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories