முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாம போயிடுவீங்க! திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை வார்னிங்!

Published : Feb 06, 2025, 09:33 AM ISTUpdated : Feb 06, 2025, 09:46 AM IST

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 

PREV
14
 முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாம போயிடுவீங்க! திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை வார்னிங்!
முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாம போயிடுவீங்க! திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை வார்னிங்

சென்னை ஓட்டேரி அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்  சேகர்பாபு நேற்று பேட்டியளிக்கையில்: திருப்பரங்குன்றம்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என குறிப்பிட வேண்டாம் பாஜகவினர் என்று தான் குறிப்பிடுவேன். இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அண்ணாமலை மற்றும் எச். ராஜாவிற்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம்.  எங்கள் முதல்வர் எங்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தி இருக்கிறார். வட மாநிலத்தைப் போன்று கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். எங்கள் முதல்வர் எங்கு கலவரம் ஏற்பட்டாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார். பெரியார் மண்ணில் திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெருவதற்கு ஒரு காலமும் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டார். திருப்பரங்குன்றம் போன்ற கோயில் பிரச்சனையை எடுத்ததால் பாஜகவுக்கு பூஜ்ஜிய வாக்கு சதவீதம் கூட கிடைக்கப்போவதில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து அரசியல் குளிர்காய நினைக்கிறார்கள் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். 

24
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

அதேபோல் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தான் தமிழ்நாடு. எங்களைப் பொறுத்தவரைக்கும் நிச்சயம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும். அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என நம்புகிறோம். அதற்கான முயற்சிகளை அரசு உரிய முறையில் எடுக்கும். இதை பெரிய விவகாரமாக்கி அதில் லாபம் அடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: வடமாநிலம் போல பிரச்சினை உருவாக்க நினைக்கிறீங்களா? அண்ணாமலை, எச்.ராஜாவுக்கு வார்னிங் கொடுக்கும் சேகர்பாபு!

34
அண்ணாமலை

இந்நிலையில் அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதிக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருப்பரங்குன்றத்தின் சரித்திரம் தெரியுமா? 1926ல் இதே பிரச்சனை வந்த போது, திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை முழுமையாக கோயிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள், இந்து மக்களுக்காக தற்காத்த ஒரு கோவிலை திமுக தாரைவார்க்க தயாராக இருக்கிறது. 

இதையும் படிங்க: அலறிய தலைநகர் சென்னை! ஆட்டோவில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை! திமுகவை விளாசும் அண்ணாமலை!

44
முருக பக்தர்கள்

எங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம், ஒடுக்குவோம் என்று சொல்கிறார்கள். அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதியை எப்படி அடக்க வேண்டும் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். அங்கு போராடுபவர்கள் முருக பக்தர்கள். அவர்கள் மீது கை வைத்தால் நீங்க இருக்க மாட்டீங்க. இனிமேல் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று பேசினால், ரகுபதி இருக்கும் இடம், அவருக்கே தெரியாமல் போகும். திமுகவின் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் எங்கக்கிட்ட வேண்டாம். எம்.பி. நவாஸ் கனி நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை. இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என அமைச்சர் ரகுபதி சொல்கிறார். அவர் அடக்கிய லட்சணத்தை பார்த்தோம் என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories