Annamalai: புதிய அரசியல் கட்சி.. அடுத்த தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

Published : Jun 05, 2026, 12:33 PM ISTUpdated : Jun 05, 2026, 01:04 PM IST

Annamalai New Political Party: பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்க உள்ளதாகவும், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் இன்று (மே 5) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

PREV
16
புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாக அண்ணாமலை அறிவிப்பு

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்க உள்ளதாக இன்று (மே 5) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது அரசியல் இயக்கத்தை கட்சியாக மாற்ற உள்ளதாகவும், தனது கட்சி அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியியும் எண்றும் அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் தனது கட்சியில் இணைவதற்காக இணைய லிங்கையும் (www.wetheleader.org) அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார்.

26
எனது கட்சியில் யாருக்கும் நிரந்தரம் இல்லை

நான் தொடங்கும் கட்சியில் எந்த நாற்காலியும் யாருக்கும் நிரந்தரம் இல்லை எனக்கூறிய அண்ணாமலை, நமது கட்சியில் எந்த தலைவருக்கும் நிரந்தர பதவி கிடையாது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு பேசிய அண்ணாமலை, ''தமிழகத்தில் இன்றும் புதிய அரசியல் கட்சிக்கான தேவை உள்ளது. 18 ஆண்டுகளாக புதிய பாதையை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் நாம் சுத்தமான அரசியலை கொண்டு வர வேண்டும்.

36
நமது இயக்கம் யாருக்கும் எதிரி இல்லை

நாம் தொடங்கப்போகும் இயக்கம் யாருக்கும் எதிரி கிடையாது. நாம் செய்யப்போவது சாதாரண விஷயம் இல்லை; பெரிய விஷயம். ஆகவே கொஞ்சம் பொறுமை தேவை. மாற்றத்தை தர வேண்டியது நம் வேலை. மாற்றம் வேண்டும் என துடித்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது வாக்களித்துள்ளனர். ஆகவே இன்றில் இருந்து நமது அரசியல் இயக்கம் தொடக்கம். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும். நாம் மாறுவோம்; மாற்றம் தானாக வரும்'' என்று கூறியுள்ளார்.

46
அடுத்த தலைமுறைக்கு பிடிக்காத சித்தாந்தம் அழியும்

மேலும் தொடர்ந்து வீடியோ மூலம் பேசிய அண்ணாமலை, ''தமிழ்நாட்டின் அரசியல், இலக்கணத்தை மாற்ற வேண்டியதே எனது விருப்பம். நமது கட்சிக்குள் சிறந்த மூளைகளை கொண்டு வருவேன். நிரந்த எம்.பி, நிரந்தர எம்.எல்.ஏ என்ற நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இங்கு நிரந்தர சித்தாந்தம் என்று ஏதும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு பிடிக்காத சித்தாந்தம் அழியும்.

56
ரஜினி அழைப்பு விடுத்தார்

சட்டப்பேரவை தொடங்கி ஊராட்சி வரை சிறப்பான, சுத்தமான ஊராட்சி அமைய வேண்டும். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறியபோது என்னை அதில் இணைய அழைத்தார். ஆனால் எப்போது என்னால் இணைய முடியவில்லை. நமது கட்சியில் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். புதியவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து பிறகு அரசியல் சொல்லி கொடுத்து கட்சியாக மாற்றுவேன். சமரசமில்லாத கொள்கை கொண்ட இயக்கமாக வழிநடத்துவதே எனது இலக்கு'' என்று தெரிவித்துள்ளார்.

66
பாஜகவில் இருந்து விலகியது ஏன்?

மேலும் தான் வெளியிட்ட வீடியோவில் பாஜகவில் இருந்து விலகியது ஏன்? என்பதற்கும் அண்ணாமலை விளக்கம் அளித்தார். ''பாஜகவில் இருந்து விலகுவதாக டிசம்பர் மாதமே பாஜக தலைமையிடம் தெரிவித்து விட்டேன். 18 மாதங்களாக எனது கருத்து வேறுபாடுகளை பாஜகவிடம் தெரிவித்தேன். தனிப்பட்ட ஒரு கட்சிக்கும், எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பாஜக அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட விரும்பினேன். பிரதமர் மோடி மீது எனக்கு எப்போதும் பெரும் மரியாதை உண்டு'' என்று கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories