கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியது என்ன என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில், பாமக, அமமுக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் இக்கூட்டணி கணிசமான வாக்குகளை அறுவடை செய்து. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்தது. அதிமுக, அமமுக, பன்னீர்செல்வம் ஒரே கூட்டணியில் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
24
வெளியேறிய ஓபிஎஸ், தினகரன்
இந்நிலையில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறினார். அப்போது அவர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது. மேலும் நயினார் நாகேந்திரன் கூட்டணி கட்சிகளை சரியாக வழிநடத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.
34
தினகரனுடன் அண்ணாமலை சந்திப்பு
இந்நிலையில் கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனை பஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது பேசப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ளார். அப்போது அவர் கூறுகையில், “அரசியலில் எப்போதுமே இப்படித்தான்; சின்ன சின்ன மனஸ்தாபங்கள் தேர்தலின்போது மாறும். அண்ணன் ஓபிஎஸையும் சந்திக்க வேண்டுமென்றே நினைக்கிறேன். அண்ணன் டிடிவி தினகரன் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.
அரசியல் களம் சூடுபிடிக்கும் போது சின்ன சின்ன மனஸ்தாபங்கள் மாறும் என்று நம்புகிறேன். அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பனும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.