தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் அரசியல் கட்சிகளின் பணிகள் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி இன்று இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த கூட்டணியில் பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.