முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக செங்கோட்டையன்!

Published : Feb 15, 2025, 12:34 PM IST

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
15
 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக செங்கோட்டையன்!
former minister sengottaiyan

அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் படங்கள் இல்லை என்றும் தன்னை வளர்த்து விட்டு ஆளாக்கிய தலைவர்களின் படம் இல்லாத காரணத்தால் விழாவுக்குச் செல்லவில்லை என விளக்கமளித்திருந்தார். 

25
former minister sengottaiyan

அதேபோல் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணைய அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாமல் உரையை நிறைவு செய்தார். இந்த சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக செங்கோட்டையன் பங்கேற்றுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

35

அதாவது மத்திய அரசு சார்பில் மாநிலங்களில் பயன்படுத்தப்படக்கூடிய திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அந்த திட்டங்களை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

45
Namakkal Kavignar Maaligai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவின் கூட்டமானது இன்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.  மத்திய அரசின் திட்டங்களை மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதும், அதன் தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழக முதலமைச்சரை கொண்டு இந்த குழு உருவாக்கப்பட்டிருந்தது.

55

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், டி.ஆர்.பாலு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையனும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories