அதிமுக வழக்கு! இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்! பதற்றத்தில் இபிஎஸ்!

Published : Feb 12, 2025, 07:47 AM ISTUpdated : Feb 12, 2025, 07:55 AM IST

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

PREV
15
அதிமுக வழக்கு! இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்! பதற்றத்தில் இபிஎஸ்!
அதிமுக வழக்கு! இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்! பதற்றத்தில் இபிஎஸ்!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 

25
புகழேந்தி

இந்த தடையை நீக்கக்கோரி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், ராம்குமார் ஆதித்தன் மற்றும் புகழேந்தி ஆகியோர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. 

35
எடப்பாடி பழனிச்சாமி

இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்: கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய தலைமை தேர்வு செய்தது உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை. உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளது. தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்துள்ள யாரும் அதிமுகவில் உறுப்பினராக இல்லை. அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்த ஆதரவு அப்படியே தொடர்கிறது என வாதிட்டார். மேலும் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு சின்னத்தை முடக்கினால் அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்றார். 

45
ரவீந்திரநாத்

தொடர்ந்து ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓபிஎஸ் கட்சியின் பெயர், கொடி பயன்படுத்த தடை விதித்திருந்தாலும், தற்போது கட்சி உறுப்பினர்கள் மன நிலைமை மாறி பெரும்பாலானோர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளனர். ஆகையால் இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தெரிவித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

55
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாமா, நடத்தக்கூடாதா? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பு எந்த மாதிரி வருமோ என்ற பதற்றத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். 

Read more Photos on
click me!

Recommended Stories