TVK MLAs: இது மட்டும் நடந்துச்சுனா.. தவெக சேர்ந்த 108 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வது உறுதி?

Published : May 08, 2026, 02:22 PM ISTUpdated : May 08, 2026, 02:58 PM IST

AIADMK - DMK Alliance: தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், பெரும்பான்மைக்கு போராடுகிறது. திமுக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

PREV
16
தவெக 108 இடங்களில் வெற்றி

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசியலில் எம்ஜிஆரை போல தான் சந்தித்த முதல் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வென்றது.

26
தவெக பெருபான்மைக்கு 119 தேவை

இந்த தேர்தலில் தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக பெருபான்மை இல்லாததால் தடுமாறி வருகிறது. காங்கிரஸ் ஏம்எல்ஏக்கள் 5 பேர் ஆதரவு அளித்த நிலையில் இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டுள்ளது.

36
திமுக அதிமுக தனித்தனியாக ஆலோசனை

இதன் காரணமாக அதிமுக எம்எல்ஏக்களை புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிச்சயமாக மீண்டும் அதிமுக ஆட்சி தான் அமையும் என அக்கட்சியின் எம்எல்ஏக்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதேபோல், திமுக தனது எம்எல்ஏக்களுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்திய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்னும் இரண்டு நாட்கள் சென்னையிலேயே இருக்கும் படி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

46
அதிமுக திமுக கூட்டணி

அதாவது திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வருகின்றன. எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும் பொறுப்பேற்க ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மிகுந்த ஆர்வமாக இருந்தாலும் ஸ்டாலினும் இதில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் திமுகவுக்கு எதிராக திரும்பிவிடும் என ஸ்டாலின் நினைக்கிறார்.

56
107 எம்எல்ஏக்களும் ராஜினாமா

இந்த பரபரப்பான சூழலில் தான் பெரும்பான்மையுடன் திமுக மற்றும் அதிமுக இணைந்து வந்தாலும் ஆட்சி அமைக்கலாம் என தமிழக ஆளுநர் அர்லேகர் தெரிவித்திருந்தார். இரு துருவங்களாக இருக்கும் அதிமுக, திமுக இணையும் பட்சத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 107 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

66
பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி

அதேபோல் பஞ்சாங்கம் ஒன்றில் எதிர்கட்சியினர் ஒரு கூட்டணியில் அணி வகுத்து நிற்க நேரும். எதிர்க்கட்சிகளுக்கு நல்ல ராஜயோக பலன் காத்திருக்கிறது. கூட்டணி ஆட்சி தான் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெகவின் ஒட்டுமொத்த ராஜினாமா எச்சரிக்கை அடுத்த 48 மணி நேரம் மாநில அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அதிகாரப் போட்டியில் யார் யாருடன் கைகோர்ப்பார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories