TVK Vijay: இதெல்லாம் இனி வேலைக்காது! தவெக தலைவர் விஜய் எடுத்த அதிரடி முடிவு?

Published : May 08, 2026, 09:29 AM IST

TVK Vijay Hung Assembly: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற விஜய்யின் தவெக, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் சிக்கலை சந்தித்துள்ளது. ஆளுநர் 118 எம்.எல்.ஏக்கள் பட்டியலை கேட்பதால், தவெக நீதிமன்றத்தை நாடவுள்ளது.

PREV
15
பெருபான்மை இல்லாத தவெக

நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் காட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வென்றது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சிமைக்க முயற்சி செய்து வருகிறது. பெருபான்மையை நிரூபிக்க 118 தேவை என்பதால் காங்கிரஸ் எம்எல்ஏ 5 பேர் ஆதரவு அளித்த நிலையில் இன்னும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டுள்ளது.

25
ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநர்

இந்நிலையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய் மே 6, 7 தேதிகளில் இரண்டு முறை ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை; ஆகையால் 118 எம்.எல்.ஏக்களின் பட்டியலை தர வேண்டும் என விஜய்யிடம் ஆளுநர் அர்லேகர் கேட்டிருந்தார். இதனால் முதல்வராப விஜய் பதவியேற்க திட்டமிட்டது ரத்து செய்யப்பட்டது.

35
உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் விஜய்

இதனிடையே தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆளுநர் அர்லேகர் ஆட்சி அமைக்க அழைக்காதது பெரும் விமர்சனங்களை எழுப்பி வருகிறது. மேலும் ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இதனால் தவெக உச்சநீதிமன்றத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளது. இதுதொடபாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியுடன் அவரது தவெகவினர் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

45
பாஜக போடும் சதி

அரசியலமைப்புச் சட்டம் 164(1) முதலமைச்சரை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆனால், யாருக்கும் பெரும்பான்மை இல்லாதபோது, யாரை அழைப்பது என்பது ஆளுநரின் முடிவைப் பொறுத்தது. ஆளுநர் ஒரு நிலையான அரசை விரும்புவதால், 118 எம்.எல்.ஏ-க்களின் பட்டியலைக் கேட்கிறார். ஆனால், விஜய்யை அதிகாரத்தில் இருந்து தள்ள பாஜக போடும் சதி என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. 1994 'எஸ்.ஆர். பொம்மை' வழக்கில், பெரும்பான்மையை ராஜ்பவனில் அல்ல, சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

55
பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் என்னவாகும்?

விஜய் அடுத்த சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், தமிழ்நாட்டில் சட்டப்பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம். அப்படி நடந்தால், சட்டசபை கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அதுவரை, ஆளுநரே மாநிலத்தை நிர்வகிப்பார். 2018 கர்நாடகா மற்றும் 2019 மகாராஷ்டிரா வழக்குகளில், 24 முதல் 48 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories