துணைமுதல்வரா இது? நான் கூட புளூசட்டை மாறன்னு நினைச்சுட்டேன்; கூலி விமர்சனத்தால் குழம்பிய ரசிகர்கள்

Published : Aug 14, 2025, 11:00 AM IST

சென்னையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் கூலி படம் பார்த்து விமர்சம் செய்த துணைமுதல்வர் உதயநிதியை இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

PREV
14
கூலி தான் ஹாட் டாபிக்

அண்மை காலமாக சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஹாட் டாபிக். காரணம், அவர் நடித்துள்ள கூலி திரைப்படம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அந்த வரிசையில் கூலி படமும் இடம் பெற வேண்டும் என்ற ஆர்வம் ரஜினி ரசிகர்களிடையே உள்ளது.

24
கூலி எப்படி இருக்கு?

படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்துவிட வேண்டும் என்பதற்காக படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். மேலும் பிரபலங்களும் தங்கள் பங்கிற்கு படத்தை வெற்றி பெறச்செய்யும் நடவடிக்கையில் ஒன்றாக ஒருவர் பின் ஒருவராக திரையரங்கிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

34
உதயநிதி வாழ்த்து

அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் படத்தை பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக சன் டிவி அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு திரையரங்கில் கூலி படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் படம் மாஸ் எண்டர்டெய்னராக அமையும். திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

44
தூய்மை பணியாளர்கள் போராட்டம்

இதனிடையே பணி நிரந்தரம், தூய்மை பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 தினங்களாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை சந்திக்க நேரம் இல்லை, 

ஆனால் படம் பார்த்துவிட்டு புளூசட்டை மாறன் அளவிற்கு படத்திற்கு விமர்சனம் செய்கிறீர்களா என்று இணையத்தில் காட்டமான கருத்துகள் பறக்கவிடப்படுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories